பெண்களை பொறுத்தவரை பொதுவாகவே பிறப்புறுப்பில் லேசான மற்றும் அசௌகர்யமான வாசனை இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு அங்கிருந்து துர்நாற்றம் வரும் வாய்ப்பும் உள்ளது. இது பெண்களுக்கு தொற்று அல்லது வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் அவர்களின் பிறப்புறுப்பில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆனால் இந்த துர்நாற்றத்திற்கு பிறப்புறுப்பு சுகாதாரனமின்மையும் ஒரு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். இப்போது அந்த நாற்றத்தை ஏற்படுத்தும் தவறுகள் என்னவென்று பார்ப்போம்.
அதிகப்படியான சுத்தம்செய்வது.
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரம், நீங்கள் அதை அதிகமாக கழுவினால், பிறப்புறுப்பின் இயற்கையான pH சமநிலை தொந்தரவு செய்யப்படும். இதனால், துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அங்கு வளர்கின்றன. பிறப்புறுப்பின் சாதாரண pH வரம்பு 3.8 மற்றும் 5 க்கு இடையில் உள்ளது. ஆனால் இந்த pH சமநிலை தொந்தரவு செய்யப்பட்டால், நிச்சயம் பிறப்புறுப்பு பிரச்சினைகள் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கடுமையான சோப்புகள் அல்லது நபிற கழுவும் பொருட்களை பயன்படுத்துதல்
இரசாயனங்கள், வாசனை சோப்புகள் மற்றும் பிற விஷயங்களை பயன்படுத்துவது நல்லதல்ல. ஏனெனில் அவை பிறப்புறுப்பை எரிச்சலூட்டுகின்றன. எனவே அவற்றைப் பயன்படுத்தவே வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
டோச்சிங்
பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை பராமரிக்க டோச்சிங் முறையை பயன்படுத்தும் பலர் உள்ளனர். ஆனால் இது பிறப்புறுப்புக்கு நல்லதல்ல. இது நன்மை செய்யும் பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இது சமநிலையின்மை மற்றும் பிறப்புறுப்பு துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், இது பிறப்புறுப்புப்பில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
டோச்சிங் என்றால் அதிவேகமான நீரை கொண்டு பிறப்புறுப்பை கழுவதாகும்.
ஒரு கட்டத்தில் பெண்களுக்கு ஏன் ஆண்களை பிடிக்காமல் போகிறது? இதெல்லாம் தான் காரணங்கள்..