டெங்கு காய்ச்சல் : கொசுக்கடியில் இருந்து தப்பிக்க சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்..

By Ramya s  |  First Published Jul 15, 2023, 3:32 PM IST

கொசுவினால் பரவும் இந்த டெங்கு நோய் பலரையும் பாதித்து வருகிறது.


நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவையும் அதிகரித்து வருகிறது. கொசுவினால் பரவும் இந்த டெங்கு நோய் பலரையும் பாதித்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே கொசுக் கடி என்பது மிகப்பெரிய தொந்தரவாக இருக்கும். ஆனால் கொசுக்கடியினால் ஏற்படும் தடிப்புகளை தடுக்க வழி இருக்கிறது.

இந்த தீர்வுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. நம் சமையலறையில் தினசரி பயன்படுத்து பொருள் தான் அது. ஆம். பேக்கிங் சோடா தான் அந்த பொருள். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, எளிய தீர்வு சிறிது தண்ணீர் மற்றும் சிறிது சமையல் சோடா ஆகும். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கி, கொசுக்கடித்த இடத்தில் அதனை தடவினால் போதும். 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவவும். கொசுக்கடி தடிப்புகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.

Latest Videos

undefined

கொசுக்கடியில் இருந்து எப்படி தப்பிப்பது?

  • கொசு கடித்த பகுதியை முதலில் தண்ணீர் மற்றும் சோப்புடன் கழுவவும்
  • அரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க 10 நிமிடங்களுக்கு ஒரு ஐஸ் கட்டியைத் தடவவும்
  • உலர்ந்த துணியால் அதை சுத்தம் செய்யவும்
  • இப்போது பேக்கிங் சோடா பேஸ்ட்டை தடவவும்
  • முடிந்தவரை சிறந்த தோலை மறைக்க லேசான ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது, டெங்கு காலத்தில் கொசுவலை அல்லது விரட்டியை எடுத்துச் செல்லுங்கள்.

Aspartame செயற்கை இனிப்பு : புற்றுநோய் மட்டுமல்ல, இந்த 8 ஆபத்தான உடல்நல பிரச்சனைகளும் ஏற்படலாம்..

click me!