
பீகாரில் உயிருடன் இருப்பவரை கொரோனாவால் உயிரிழந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சன்னு குமார் (40) என்பவர் கால் முறிந்த நிலையில் ஏப்ரல் 3ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், கொரோனா காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் கூறியதையடுத்து, இறப்பு சான்றிதழையும் கொடுத்துள்ளனர்.
பின்னர், இறுதிச் சடங்கின்போது தான் இது வேறு ஒருவருடைய உடல் என்று உறவினர்களுக்கு தெரியவந்தது. இதனையத்து, பாட்னா அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது, சன்னு குமார் ஏற்கெனவே சேர்க்கப்பட்டிருந்த வார்டில் சிகிச்சையில் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
தவறான தகவல் அளித்து உயிருடன் இருந்தவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்த மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.