எல்லாம் கையை மீறிப்போச்சு.. கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா.. பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம்.!

By vinoth kumarFirst Published Apr 5, 2021, 10:56 AM IST
Highlights

இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவில் ஒரே நாளில் 1,03,558 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1,25,89,067ஆக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதிக்கு பிறகு புதிய தொற்று உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 478 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,65,101ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,16,82,136 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 52,847 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 7,41,830 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 7,91,05,163 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8,93,749 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 24 கோடியே 90 லட்சத்து 19 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

உலகளவில் ஒருநாள் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இந்தியா 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 36,000 , பிரேசிலில் 31,000, பதிவான நிலையில் இந்தியாவில் 1,03 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

click me!