
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்ககளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணி நேரத்தில் 93,249 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,24,85,509 ஆக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கு பிறகு புதிய தொற்று 93,249 கடந்து உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 513 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 1,64,623ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,16,29,289 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 60,048 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 6,91,597 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 7,59,79,651 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 24 கோடியே 81 லட்சத்து 25 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.