
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு உலகம் முழுவதுமே பக்தர்கள் உள்ளனர். ஒரு சில பக்தர்கள் மாதந்தோறும் திருப்பதிக்கு செல்வது உண்டு. அவ்வாறு செல்லும் போது பல நடைமுறை சிக்கல் உள்ளது .
லைனில் காத்திருக்க வேண்டும், அடையாள அட்டை தேவை, எத்தனை லட்டு கிடைக்கும் ? சாமியை தரிசிக்க எவ்வளவு நேரம் ஆகும் என பல கேள்விகள் உள்ளது. அதிலும் குறிப்பாக 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் மிகவும் சிரமம் அடைவார்கள்.
இனி இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல், லைனில் காத்திராமல் அதுவும் இலவசமாக, ஒரு நாளைக்கு 700 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். எப்படி என தெரிய வேண்டுமா ?
அதாவது நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்யலாம்
நிபந்தனைகள்:
1)ஆதார் கார்டு அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
4).காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசன நேரம்.
5).தினமும் 700பேருக்கு அனுமதி உண்டு.
6.)உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவருக்கும் ஆதார் அவசியம்.
7).காலை உணவு பால் இலவசம்.
8.)அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9)ஒருமுறை சென்றுவந்த பின்பு 3 மாதம் கழித்தே அடுத்து அனுமதிக்கப்படுவர்.
10 ) இவை அனைத்தும் இலவச சேவை என்பது குறிப்பிடத்தக்கது .
இனிவரும் காலத்தில் முதியவர்கள் இந்த இலவச சேவையை பயன்படுத்தி இலவசமாக திருப்தி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.