ஐந்து நிமிடத்தில் இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி... இப்படி ஒரு முறை செய்தால்...இட்லி, தோசை 10 கூட சாப்பிடலாம்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 04, 2022, 01:08 PM IST
ஐந்து நிமிடத்தில் இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி... இப்படி ஒரு முறை செய்தால்...இட்லி, தோசை 10 கூட சாப்பிடலாம்..!

சுருக்கம்

Curry leaves chutney: எளிதாக மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் இந்த கருவேப்பிலை சட்னியை  எப்படி செய்வது என்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கருவேப்பிலையை சாதாரணமாக சமைத்துக் கொடுத்தாலும், யாரும் அதனை சாப்பிடுவதில்லை, ஒதுக்கி வைப்பது உண்டு அதற்கு பதிலாக இது போல் சட்னி, துவையல் போன்றவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொடுக்கும் பொழுது அதில் இருக்கும் சத்துக்கள் நமக்குக் கிடைக்கும்.

எனவே அன்றாட உணவில் கட்டாயம் கறிவேப்பிலையை ஏதாவது ஒரு உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.  எளிதாக மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யப்படும் இந்த கருவேப்பிலை சட்னியை  எப்படி செய்வது என்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 தேவையான பொருட்கள்: 

கறிவேப்பிலை – 10  

தக்காளி – 3 

வர மிளகாய் – 6 

சின்ன வெங்காயம் – 10

உப்பு – தேவையான அளவு

கடுகு – அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்.

செய்முறை விளக்கம்: 

1. முதலில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். 

2. பின்பு அடுப்பில் கடாயை வைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். 

3. பின்னர் மிளகாய் வற்றலை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள். 

4. வெங்காயம் கண்ணாடி பதம் வர நன்கு வதங்கியதும், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது சுத்தம் செய்து வைத்துள்ள கறிவேப்பிலையை உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் சுருள வதங்கியதும், அடுப்பை அணைத்து ஆற விட்டு கொள்ளுங்கள்.

5. எல்லா பொருட்கள் நன்கு ஆறியதும், ஒரு மிக்ஸி சாறில் பொருட்களை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இறுதியில், உங்களுடைய கருவேப்பிலை சட்னி ரெடி.

அரைத்த இந்த சட்னிக்கு தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஏற்கனவே தாளித்து தான் செய்து இருக்கிறோம் எனவே சுடச்சுட இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஒரு முறை நீங்கள் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்கள் ருசி உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்,  மீண்டும், மீண்டும் செய்ய தோணும்.

மேலும் படிக்க...Hair loss prevention Amla: எலி வால் போல் இருக்கும் முடியை...அசுரவேகத்தில் வளர வைக்க 3 நெல்லிக்காய் போதும்..!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்