
இன்றைய நவீன கால கட்டத்தில், தொப்பை மற்றும் தொந்தி இரண்டுமே சிறுசு முதல் பெரியவர் வரை உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல் பாடாய் படுத்துகிறது. அதிக எடையை கொண்டிருப்பவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் இருக்கும்.
தொப்பைக்கு முக்கியக் காரணமாக, நாம் சாப்பிடும் உணவுப் பழக்கம் இருக்கிறது. மேலும், மாவுச்சத்து நிறைந்த கார்போஹைட்ரேட்டை அதிகம் உட்கொள்வது, கொழுப்பு நிறைந்த உணவு போன்றவை காரணமாக இருக்கலாம்.
உடலில் சேரும் கொழுப்பை கரைப்பது என்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு உங்களின் சீரற்ற வாழ்க்கை முறை மாற்றம் 50 சதவீதம் மற்றும் 50 சதவீதம் உணவு முறை முக்கிய காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
எனவே, உணவு முறையில் குறிப்பாக 40 நாட்களில் உங்களுடைய பெரிய தொப்பையை கரைக்கக் கூடிய சக்தி இஞ்சிக்கு உண்டு! அதை எப்படிப் பயன்படுத்துவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.
இஞ்சியின் மகத்துவம்:
உடல் எடையை கணிசமாக குறைக்க கூடிய ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. ‘இஞ்சிக்கு மிஞ்சிய மருந்து இல்லை’ என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடிய இந்த இஞ்சி வயிற்றில் இருக்கும் கழிவுகளை நீக்கி வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் அதீத சக்தி படைத்தது. இஞ்சியில் இருக்கும் இந்த காட்டம், நம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு உரிய அருமருந்தாக செயல்படுகிறது.
இஞ்சியை எப்படி பயன்படுத்துவது..?
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆண், பெண் வித்தியாசமின்றி தாராளமாக அன்றாட உணவில் இந்த இஞ்சியை இப்படி பயன்படுத்தலாம்.
1. இஞ்சியை முதலில் இடித்து அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இஞ்சி சாறை அடுப்பில் வைத்து லேசாக சுண்ட விட வேண்டும்.
2. கொஞ்சம் சுண்டியதும், அதில் தேவையான அளவிற்கு தேன் சேர்த்து இரண்டு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த இஞ்சி சூரணத்தை சாப்பிடுவதற்கு முன்பு காலையில் ஒரு கரண்டி சாப்பிட வேண்டும்.
3. அதற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து நீங்கள் சாதாரணமாக மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் பிறகு மாலை நேரத்தில் வயிறு காலியாக இருக்கும் போது ஒரு கரண்டி சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் சுட வைத்து குடிக்க வேண்டும்.
4. இதை சாப்பிட்ட உடன் சுடு தண்ணீர் தான் கண்டிப்பாக குடிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து 30 நாட்கள் கஷ்டப்பட்டு நீங்கள் செய்து பாருங்கள், நிச்சயம் நல்ல ஒரு மாற்றம் உங்கள் உடலில் தெரிய ஆரம்பிக்கும்.
எனவே, உணவு முறை வாழ்கை முறையில் தேவையான மாற்றத்தை கொண்டு வந்தாலே, உடல் எடை குறைந்து நீங்கள் ஒல்லியாக மாறலாம்.
அது மட்டுமல்லாமல் தினமும் ஏதாவது ஒரு டம்ளர் அளவிற்கு வாழைத்தண்டு சாறு, பாகற்காய் சாறு அல்லது பூசணி சாறு இந்த மூன்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து பருகி வர வேண்டும். உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்கி தேவையற்ற தசைகளை கரையச் செய்யும் இந்த அற்புத சாற்றுக்கு ஈடு இணை இல்லை. 30 நாட்களில் இந்த இரண்டு விஷயத்தையும் செய்பவர்களுக்கு எந்த பருவத்தில் தொப்பை இருந்தாலும், அது உடனே கரைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.