
பணம் என்பது இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் தேவையாக உள்ளது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம் இல்லையேல் இவ்வுலகில் வாழ்வது என்பது கடினம் தான் என்பதையும் ஏற்றுக் கொண்டாக வேண்டியது இருக்கிறது. எனவே, பணத்தை ஈட்டுவதற்கு முதலில் மகாலட்சுமியின் அனுகிரகம் தேவை. ஆகையால்,உங்கள் வீட்டில் செல்வங்கள் தொடர்ந்து சேருவதற்கு,வருமான தடை நீங்கி, பொருளாதாரம் உயர்ந்து, செல்வம் மழை பொழிய செய்யக் கூடிய அற்புத எளிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம்.
திருமண பந்தம் என்பது, ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். அத்தகைய திருமணங்களில் வாழ்த்தும் பெரியவர்கள் ‘பதினாறு செல்வங்களும், பெற்று பெருவாழ்வு’ வாழ என்று ஆசீர்வதிப்பது வழக்கம். ஒரு மனிதன் முழுமை அடைவது திருமண பந்தத்தில் தான். அதனால் திருமணமான ஒருவருக்கு பதினாறு செல்வங்களும் கிட்ட பெரியவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள். பதினாறும் பெறுவது என்பது பதினாறு செல்வங்களை குறிக்கிறது. வாழ்க்கையில் எல்லா குணநலன்களையும், பெறுவதோடு மட்டுமல்லாமல் பணம், பொருள் எனும் செல்வங்களையும் பெறுவதற்கு மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது படவேண்டும் என்பதாகும்.
பிரம்ம முகூர்த்தம்:
காலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழும் நபர்களுக்கு இயல்பாகவே மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைக்கிறது. இவர்கள் சாதாரணமாக விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் சகல சௌபாக்கியங்களும் நாளடைவில் அடைந்து விடுவார்கள்.
சூரிய உதயத்தின் பொழுது எழுந்து செய்யும் பரிகாரங்கள்..?
பிரம்ம முகூர்த்தத்தில் எழ முடியாதவர்கள் சூரிய உதயத்தின் பொழுது ஆவது எழ வேண்டும். சூரிய உதயமாகும் முன்பு எழுவது தான் ஒரு மனிதனுக்கு சிறந்த நற்குணங்களையும், செல்வத்தையும் அளிக்கும். சூரிய உதயத்தின் பின்பு எழும் பழக்கம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரமாக வெற்றிகள் கிடைத்து விடுவதில்லை. சோம்பேறித்தனமும், அலட்சியமும் கொண்ட இவர்கள் எப்போதும் புலம்புவதை குறிக்கோளாக கொண்டிருப்பார்கள். தேவையற்ற சிந்தனைகளும், தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்.
வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்..?
சூரிய உதயத்தின் பொழுது எழுந்து சுத்த பத்தமாக குளித்து விட வேண்டும். பிறகு, வாசல் கூட்டி பெருக்கி பச்சரிசி மாவில் கோலம் போட்டுவிட்டு, உங்கள் பூஜை அறையில் ஒரு சிறிய பெட்டியில் நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தில் கொஞ்சம் பணத்தை வைக்க வேண்டும்.
அதனுடன் மல்லிகைப்பூ சிறிதளவு, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் கொஞ்சம், சந்தன கட்டி ஒன்று, வில்வ இலை ஆகியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மகாலட்சுமி படம் வைத்து அதற்கு முன்பாக இரண்டு குத்து விளக்குகளில் ஐந்து முக திரி இட்டு எண்ணெய் ஊற்றி அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை எரிய விட வேண்டும். பிறகு அன்று ஒரு வேலை விரதம் இருக்க வேண்டும்.
இவ்வாறு சூரிய உதயத்தின் பொழுது செய்து வருபவர்களுக்கு நாளடைவில் வருமான தடை நீங்கும் என்பது நியதி. இதன் மூலம் உங்கள் பொருளாதாரம் பன்மடங்கு உயர்ந்து, செல்வ சேர்க்கை உண்டாகும். தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் பெண்கள் இதனை வீட்டில் கடைப்பிடித்து வர வேண்டும்.
தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களும் இதனை தொழில் ஸ்தாபனங்கள் செய்யலாம். தொழில் ஸ்தாபனங்களில் செய்பவர்கள் ஆண், பெண் என்ற வித்தியாசம் பாராமல் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் வீட்டில் செய்யும் பொழுது பெண்கள் செய்வது கூடுதல் சிறப்பாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.