Today astrology: சனியின் மாற்றத்தால் கும்ப ராசியில் குரு சேர்க்கை...இந்த 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கை.!

Anija Kannan   | Asianet News
Published : Mar 04, 2022, 06:05 AM IST
Today astrology: சனியின் மாற்றத்தால் கும்ப ராசியில் குரு சேர்க்கை...இந்த 3 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கை.!

சுருக்கம்

Today astrology: ஜோதிடத்தில் கோள்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

ஜோதிடத்தில் கோள்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கிரகங்களின் ஒவ்வொரு ராசி மாற்றமும் அனைத்து ராசிகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

நவகிரகங்களில் முக்கிய கிரகமாகவும், ஒவ்வொரு ராசியிலும் நீண்ட காலம் சஞ்சரிக்கக்கூடிய கிரகம் சனி கிரகம். கர்ம காரகன் என அழைக்கப்படும் சனி, நீதி தேவனாக செயல்படுகிறார். 

ஜோதிடத்தில் 9 கிரகங்கள் மற்றும் 12 ராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் கிரகங்களின் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 9 கிரகங்களில், சனி பகவான் ஒரு செல்வாக்குமிக்க கிரகமாக கருதப்படுகிறார். சனி அந்தந்த நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். நற்செயல்கள் செய்பவர்களுக்கு வெகுமதிகள் கிடைக்கும், தீய செயல்களைச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஏப்ரல் 29ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பிரவேசித்து ஜூன் 4ஆம் தேதி வரை இந்த ஸ்தானத்தில் இருப்பார். இதற்குப் பிறகு, ஜூன் 4 முதல், பிற்போக்கு இயக்கத்தில் சஞ்சரித்து, கும்ப ராசியில் மீண்டும் நுழைவார். ஜூலை 12 அன்று, மகரத்தில் தலைகீழ் இயக்கத்தில் நுழைவார். இது பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு நேரடி விளைவை ஏற்படுத்தும். அவை எந்ததெந்த ராசிகள் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம். 

கடகம்:

சனி பகவான் லக்னத்தில் 7 மற்றும் 8 ம் இடத்திற்கு வருவதன் மூலம் கடக ராசியில்  எட்டாவது வீட்டிற்குள் நுழைவார். இதன் பலனாக பணியிடத்தில் வெற்றி உண்டாகும். இதனுடன் தினசரி வருமானமும் அதிகரிக்கும். கடக ராசிக்காரர்களுக்கு பழைய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். இது சிறிய கவலையை உண்டாக்கும். காதல் உறவுகளில் பதற்றம் ஏற்படலாம். இந்த நேரத்தில், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை தேவை. குழந்தையின் கல்வி மற்றும் முன்னேற்றம் குறித்து மனம் சஞ்சலிக்கலாம். கடக ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பிரச்சனைகளை உருவாக்கலாம்.

சிம்மம்:

சனியின் ராசி மாற்றத்திற்குப் பிறகு சனிபகவான் சிம்ம ராசியில் 7ஆம் வீட்டில் நுழைவார். ஜோதிட சாஸ்திரத்தின் படி ஏழாவது வீடு கடன், எதிரிகள் மற்றும் திருமண வாழ்க்கைக்கு காரணியாக கருதப்படுகிறது. சனிபகவான் உச்ச வீட்டில் தங்கியிருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். 

அதே சமயம், தாயாரின் உடல் நலனில் அக்கறை இருக்கும். மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். தினசரி வருமானம் கூடும். கூட்டு சேர்ந்து செய்யும் வேலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நன்மைகள் சாத்தியமாகும். அதுமட்டுமின்றி திருமண வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும். காதல் உறவுகளில் இனிமை இருக்கும்.

கன்னி:

சனி கன்னி ராசிக்கு 5 ஆம் வீட்டில் நுழைவார். ஜோதிடத்தின் படி, ஐந்தாவது வீடு கல்வி, குழந்தைகள், அறிவுசார் திறன் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இதனுடன், நோய், எதிரி மற்றும் கடன் ஆகியவையும் ஒரு காரணியாக கருதப்படுகின்றன.  

சனியின் இந்த ராசி மாற்றம் சில பிரச்சனைகளை உருவாக்கும். பாதங்கள் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். கண் சம்பந்தமான பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம்.

மேலும் படிக்க....பசுவிலிருந்து கிடைக்கும் இந்த பொருளை வீட்டில் தெளித்தால்...பணப்பிரச்சனை நீக்கி...லக்ஷ்மி கடாக்ஷம் பெருகுமாம்?


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்