கல்யாணமாகாத ஆணுக்கும் திருமணமான 40 வயது பெண்ணுக்கும் ஏற்பட்ட விபரீத காதல்...! தீக்குளித்து உயிரிழந்ததால் பரபரப்பு..!

Published : Apr 02, 2019, 03:53 PM IST
கல்யாணமாகாத ஆணுக்கும் திருமணமான 40 வயது பெண்ணுக்கும் ஏற்பட்ட விபரீத காதல்...! தீக்குளித்து உயிரிழந்ததால் பரபரப்பு..!

சுருக்கம்

தவறான உறவில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதலர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தவறான உறவில் ஈடுபட்டு வந்த கள்ளக்காதலர்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன்(23) என்ற நபருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக மாறி பின்னர் கள்ளகாதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை. பாரதி என்ற அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். சரவணனுக்கும் பாரதிக்கும் இடையே இருந்த தவறான உறவை அறிந்த உறவினர்கள் இவர்களை கண்டித்து பிரிந்து சென்று ஒழுக்கமாக வாழ வற்புறுத்தி உள்ளனர்.

ஆனாலும் இவர்கள் இருவரும் பிரிய மனமில்லாமல் ஊரை விட்டு கிளம்பி கடந்த 2017 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் தஞ்சம் அடைந்து அங்கு ஒரு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த தகவல் பின்னர் உறவினர்களுக்கு தெரிய வரவே ஈரோட்டிற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் உறவினர்கள். மீண்டும் இருவரும் பிரிந்து அவரவர் வேலையைப் பாருங்கள் பாரதிக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் சரவணனும் திருமணமாகாத நபர் அவருடைய வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என அறிவுரை கூறி உள்ளனர்.

இருந்தாலும் இருவரும் பிரிய மறுத்து தாங்கள் தங்கியிருந்த வீட்டில் கதவை மூடிக்கொண்டு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்து உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Weight Lifting For Women : பெண்கள் கண்டிப்பா 'எடை' தூக்கும் பயிற்சி செய்யனும்!! அதோட நன்மைகள் அவ்ளோ இருக்கு
குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி