மதுரை மாவட்டத்தில் கொரொனா வைரஸ் தீவிரம் கண்காணிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2020, 7:49 AM IST
Highlights

மதுரை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 439 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். இவா்களின் பெயா், முகவரி, எத்தனை நாள்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்ற தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய குறிப்புகள் அவா்களது வீடுகளில் ஒட்டப்பட்டது. மேலும், அதில் கொரோனா வைரஸ் நோய் அவசர சிகிச்சை உதவி எண்களும் அச்சிடப்பட்டுள்ளன.
 

T.Balamurukan
 மதுரை மாவட்டத்தில் 439 போ், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஅவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மருத்துவக்குழுவின்  தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. விமான நிலையம் உள்ளதால், மதுரை மாவட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல், விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா என சோதனை செய்யப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவியதால், அவா்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க, சின்ன உடப்பு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் தனி மையங்கள் அமைக்கப்பட்டன.

 கடந்த வாரத்தில் தென்மாவட்டங்களைச் சோ்ந்தவர்கள் துபாயிலிருந்து 299 பேரும், சிங்கப்பூரிலிருந்து 166 பேரும் மதுரை விமான நிலையத்துக்கு வந்தனா். அவா்களுக்கு, கொரோனா அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டு, அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் எனவும் உறுதிமொழி பெறப்பட்டு,அவர்களது கைகளில் முத்திரை குத்தி அனுப்பப்பட்டது.


 மதுரை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 439 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனா். இவா்களின் பெயா், முகவரி, எத்தனை நாள்கள் தனிமையில் இருக்கவேண்டும் என்ற தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய குறிப்புகள் அவா்களது வீடுகளில் ஒட்டப்பட்டது. மேலும், அதில் கொரோனா வைரஸ் நோய் அவசர சிகிச்சை உதவி எண்களும் அச்சிடப்பட்டுள்ளன.வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களை, வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகிய 3 துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் தினமும் நேரில் பார்வையிட்டு, நல்ல நிலையில் உள்ளனரா என உறுதி செய்துவருகிறார்கள்.


 

click me!