மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா... 4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்..!

Published : Mar 17, 2021, 12:14 PM IST
மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா... 4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்..!

சுருக்கம்

தமிழகத்திலும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசுகள் நோய் பரவலைத் தடுப்பதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். 

தமிழகத்திலும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது ஊரடங்கை அமல்படுத்தும் அவசியம் இல்லை என சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குஜராத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், குஜராத்தில் நான்கு பெரு நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்