கொரோனா எதிரொலி..! ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பலத்த பரிசோதனை...!

By ezhil mozhiFirst Published Mar 11, 2020, 2:31 PM IST
Highlights

ரயில்வே நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை வைத்தது. 

தற்போது வரை கருணா வைரசால் பாதிக்கப்பட்ட 44 பேரை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விமான நிலையங்களில் வரக்கூடிய வெளிநாட்டவர்களை பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 753 பேர் விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி ஒரு நிலையில் ரயில்வே நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை கோரிக்கை வைத்தது. அதன் படி சென்ட்ரல் எழும்பூர் ரயில் நிலையங்களில் மருத்துவ குழுக்கள் அமைத்து பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். 

கொரோனா பாதிப்பு தென்படுபவர்களை தனி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு டெல்லியில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில்  நாடு முழுக்க 60 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  

click me!