முருக கடவுள் கையில் கொரோனா..!! நாரதராக நடிகர் வடிவேலு.! மதுரையில் மிளிரும் பரபரப்பான போஸ்டர்.!!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2020, 9:32 AM IST
Highlights

உலக நாடுகளே கொரொனாவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மதுரையில் கொரொனா நகைச்சுவையோடு முருக கடவுள், நடிகர் வடிவேலுடன் ஒப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மதுரையில் பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு 

T.balamurukan

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகத்தில் 144 உத்தரவு இன்று மாலை முதல் ஆரம்பித்து 31ம் தேதி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. முதன் முதலாக மதுரையில் உள்ள ஒருவருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மதுரைக்காரர்கள் எப்போதுமே வித்தியாசமானவர்கள்.கல்யாண வீடாக இருந்தாலும் சரி.இறந்த வீடாக இருந்தாலும் சரி,அரசியலாக இருந்தாலும் சரி போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவதில் மதுரைக்காரர்களை யாராலும் மிஞ்ச முடியாது. அந்த அளவிற்கு போஸ்டர் ஒட்டுவதில் இவர்கள் கெட்டிக்காரர்கள்.அரசியல்வாதிகளுக்கு பட்டம் கொடுத்து சுவரொட்டி அடிப்பதில் தொடங்கி, சினிமா நடிகர்களை பாராட்டுவது வரை வாசகங்கள் ஒவ்வொன்றையும் தெறிக்க விடுவதில் மதுரைக்காரர்களை மிஞ்சுவதற்கு ஆளில்லை. 
உலக நாடுகளே கொரொனாவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மதுரையில் கொரொனா நகைச்சுவையோடு முருக கடவுள், நடிகர் வடிவேலுடன் ஒப்பிட்டு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் மதுரையில் பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.மதுரைக்காரர்கள் மட்டும் மஞ்சள்,வேப்பில்லை,சாணம்,சுக்கு,மிளகு,சித்தரத்தை,திப்பிலி இவற்றை பாரம்பரியத்தை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தி வருகிறார்கள்.

 நடிகர் வடிவேலுவை நாரதர் போன்றும், கடவுள் முருகன், கொரோனா வைரஸை வைத்து விளையாடுவதுபோலவும் சித்தரித்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.
அந்த சுவரொட்டியில்...,

ஏய், கொரோனா, என் மக்களையே டர்ர்ர் ஆக்குகிறாயா?

முருகன்: நாரதரே வேலோடு விளையாடியே ஃபோர் அடித்து விட்டது. நான் விளையாட வேறு ஏதேனும் புதிதாய் கொண்டு வாருங்களேன்.

நாரதர்: முருகா, பூமியில் கொரோனா வைரஸ் எனும் கிருமி மனிதர்களை அச்சுறுத்தி கொண்டு இருந்தது. அதனையே பிடித்துக் கொண்டு வந்துள்ளேன். அதனிடம் காட்டு உனது திருவிளையாடலை… என்பதுபோல் வாசகம் உள்ளது.


அதற்கு அசரீரி: நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உலகின் எட்டுத்திக்கிற்கும் கற்பித்த தமிழ்ச்சமூகமே, அதனையே பின்பற்று, எதற்கும் அஞ்சாதே! நான் இருக்கிறேன் உன்னோடு… யாமிருக்க பயமேன் என வாசகம் இடம் பெற்றுள்ளது.

அதில் முருகன் கொரோனா வைரஸ் கையில் வைத்துள்ளதைப்போலும், அதில் நாரதராக நடிகர் வடிவேலு படத்தையும் அச்சிட்டு அமர்க்களப்படுத்தியுள்ளார்கள். மதுரை குசும்பு இதுதானோ...!!

click me!