கொரோனா பாதிப்பு..? கன்னியாகுமரியில் இதுவரைக்கும் 2பேர் பலி.!! மெடிக்கல் ரிப்போர்ட் இன்னும் வெளியாகவில்லையாம்..

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 9:56 AM IST
Highlights

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியில் உள்ளவர்கள் 62பேர்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஒருவர் பலியாகி இருக்கிறார். இந்தநிலையில் இன்று  66 வயது மீனவர் ஒருவர் பலியாகி இருப்பது அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ஆனாலும் இவருடைய மரணம் கொரோனா தொற்று என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
 
T.Balamurukan

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 66 வயது மரியஜாண்.இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் ஊர் திரும்பியவர் வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல், இருமல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில் இன்று திடீரென இறந்து போனார்.

கொரோனா தொற்று குறித்த மருத்துவ பரசோதனை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. பரிசோதனை அறிவிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.அவரது மகன் சவுதி அரேபியாவில் பணியாற்றி கடந்த 13 ம் தேதி ஊர் திரும்பிய நிலையில் அவரும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிட தக்கது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்க பட்டிருந்த முதியவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு பின்னரே கொரொனா தொற்று குறித்து உறுதி செய்யப்படும்.
இரண்டு பேர் இறந்த நிலையில் அவர்கள் கொரோனாவால் இறந்ததற்கான மருத்துவ அறிக்கை இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
 
click me!