கொரோனாவை குணப்படுத்த சித்தமருத்துவத்தில் மருந்து... ஆராய்ச்சிக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2020, 8:53 AM IST
Highlights

கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான வைரஸ்களையும், வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ராசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக பருகினாலே அழித்துவிட முடியும் எனவே சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது

T.Balamurukan

கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான வைரஸ்களையும், வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ராசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக பருகினாலே அழித்துவிட முடியும் எனவே சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை ஒழிக்க சித்த மருத்துவ முறையில் குணப்படுத்த முடியும் என்பது குறித்து மத்திய மாநில அரசுகள், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் சோதனை செய்து அறிவிக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த முத்துகுமார் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கொரோனா வைரஸ் தாக்குதலில் உலகம் முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனா்.இதில் 18 ஆயிரம் போ் பலியாகி இருக்கிறார்கள். இந்த நோய்த்தொற்றின் தாக்குதல் இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த நோய்த் தாக்குதலுக்கு தடுப்பு மருந்தோ, மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இதனை சித்த மருத்துவத்தின் மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகையான வைரஸ்களையும், வீரம், பூரம், லிங்கம், பாதரசம், ராசெந்தூரம், அரிதாரம், கேஷ்தம் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை ஒன்றாக கலந்து மருந்தாக பருகினாலே அழித்துவிட முடியும். இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகளுக்கும், இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கும் மனுக்கள் அனுப்பினேன். அந்த மனு தொடா்பாக , இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, கொரோனாவை சித்த மருத்துவ முறையில் குணப்படுத்த முடியும் என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் இந்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் சோதனை செய்து அறிவிக்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆா்.சுப்பையா, ஆா்.பொங்கியப்பன் ஆகியோர் கொண்ட அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வசந்தகுமாரும், அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டியனும் ஆஜராகினா். அப்போது நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

click me!