சீனாவில் மீண்டும் தாண்டவமாடிய கொரோனா.!! நேற்று மட்டும் 7 பேர் பலி..!!

By Thiraviaraj RMFirst Published Mar 24, 2020, 10:06 AM IST
Highlights

சீனாவில் கொரோனா தொல்லை ஓய்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதித்து 7பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது

T.Balamurukan

சீனாவில் கொரோனா தொல்லை ஓய்ந்தது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் மீண்டும் கொரோனா பாதித்து 7பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனாவில் மீண்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலகளவில் கொரோனா வைரஸ்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை 476 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்தியாவில் உள்ள மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது.விமானப்போக்குவரத்து,ரயில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசியப் பொருள்கள் விலை தாறுமாறாக எகிறிப்போய்க் கொண்டிருக்கிறது.

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில நாட்களாக அந்த வைரசின் தாக்கம் தணிந்து இருந்தது. குறிப்பாக கொரோனா கண்டறிப்பட்ட உகான் நகரில் கடந்த 6 நாட்களாக யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை என்கிற சந்தோசத்தில் சீனா இருந்தது.இந்த நிலையில், சீனாவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த 7பேர் பலியும் ஹூபே மாகாணத்தில் தான் என தெரியவந்துள்ளது.

 74 பேர் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்களால் தான் மீண்டும் கொரோனா தாக்குதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி மொத்தமாக சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,171 ஆக உயர்ந்து உள்ளது.இதில் 73,159 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதோடு மொத்தமாக 3,277 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.சீனாவில், கொரோனா வைரசால்  பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 சதவீதம்பேர் குணமடைந்து, ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் கொரோன தலைதூக்க ஆரம்பித்திருப்பது சீனாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

click me!