கொரோனாவுக்கு முதல் பலியானவர் வீட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தாக்குதல்..??

Published : Mar 15, 2020, 11:51 PM IST
கொரோனாவுக்கு முதல் பலியானவர் வீட்டிற்கு  செய்தி சேகரிக்கச்  சென்ற பத்திரிகையாளர்களுக்கு  கொரோனா தாக்குதல்..??

சுருக்கம்

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலியானவர் வீட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற  பத்திரிகையாளர்கள் கொரொனா தொற்று இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் செய்தியாளர்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

T.Balamurukan

 இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் பலியானவர் வீட்டிற்கு செய்தி சேகரிக்கச் சென்ற  பத்திரிகையாளர்கள் கொரொனா தொற்று இருக்குமா என்கிற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் செய்தியாளர்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


 
உலகை நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தற்போது ஆக்டோபஸ் கைகள் போல் விரிந்து கொண்டே போகிறது.  இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர், டெல்லியை சேர்ந்த 69 வயது மூதாட்டி என இருவர் உயிரிழந்துள்ள நிலையில். இந்தியாவின் பல நகரங்கள் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முடங்கி போய் இருக்கிறது. கர்நாடகா, டெல்லி,தமிழ்நாடு,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் இதனை நோய் தொற்றாக அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு,  கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லாமல் தவிர்த்தல் என பல்வேறு அறிவுறுத்தல்கள் மற்றும் விழிப்புணர்வுகளை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் முதல் முதலாக இறந்த முதியவரின் குடும்பத்தினரை நேர்காணல் செய்த 4 செய்தியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள் அவர்களுக்கும் கொரோனா தாக்கியிருக்குமா? என்கிற அச்சம் தற்போது எழுந்திருக்கிறது. 
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!