
T.Balamurukan
ஆந்திர மாநிலம்,திருப்பதியில் அமைந்துள்ளது ஶ்ரீ ஏழுமலையான் திருக்கோவில். இந்த கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, உலகின் பல நாடுகளில் இருந்தும் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை தரிசித்து விட்டு செல்கின்றனர்.தினந்தோறும் கோடிக்கணக்கில் வருமானம் குவியும் திருத்தலம் திருப்பதி மட்டுமே.
தற்போது கொரோனா வைரஸ், உலகையே உலுக்கிவருவதால், அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருப்பதி தேவஸ்தானம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 300 ரூபாய் கட்டண தரிசனம், கட்டண சேவை, தங்கும் அறைகளை முன்பதிவு செய்யும் வசதி ஆகியவை வரும் மே மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக, சில தினங்களுக்கு முன் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மற்றொரு முக்கிய முடிவாக, பொது தரிசனத்துக்கு பக்தர்களை வைகுண்டம் கியூ அறைகளுக்குள் காத்திருக்க வைக்காமல், அவர்களை நேரடியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தரிசனத்துக்காக கியூவில் ஆயிரக்கணக்கான பக்தர்களை மணிக்கணக்கில் காத்திருக்க வைத்தால், அதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை 17.03.2020 முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஏழுமலையானுக்கு நடத்தப்பட்டுவரும் ஆர்ஜித சேவைகளான விஷேச பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், வசந்தோற்சவம் ஆகியவையும் தற்காலிமாக ரத்து செய்யப்பட உள்ளன. இவற்றில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய இருந்த பக்தர்களை, விஐபி பிரேக் தரிசனத்தில் அனுமதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.