சமூக விரோதிகள் "கை வரிசை" காட்டும் நேரம் ..! உஷார் மக்களே..!

thenmozhi g   | Asianet News
Published : Mar 21, 2020, 01:09 PM IST
சமூக விரோதிகள் "கை வரிசை" காட்டும் நேரம் ..! உஷார்  மக்களே..!

சுருக்கம்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி வணிக வளாகங்கள் பூங்கா திரையரங்குகள் பொழுதுபோக்கு மையங்கள் உள்பட அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டு உள்ளது.

சமூக விரோதிகள் கை வரிசை காட்டும் நேரம் ..! உஷார் மக்களே..! 

கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல வீட்டிற்குள் நுழைய ஒரு சிலர் திட்டமிட்டு செயல் படுவார்கள் என்றும் எனவே இதுபோன்ற சமூக விரோதிகளிடமிருந்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி வணிக வளாகங்கள் பூங்கா திரையரங்குகள் பொழுதுபோக்கு மையங்கள் உள்பட அனைத்தும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர்.

மேலும் ஒரு சிலர் வெளியில் வருவதையும் பார்க்க முடிகிறது. எனவே நாளை  மக்கள் ஊரடங்கு நிலையை கட்டாயம் பின்பற்றி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும். இதுபோன்ற ஒரு தருணத்தை பயன்படுத்தி யாராவது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக விரோதிகள் வீட்டிற்குள் நுழைந்தால் கவனமாக இருக்க வேண்டும், உங்களுக்கு சந்தேகம் ஏற்படும் சமயத்தில் உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார் காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்