லீவு விட்டதே "தனிமைப்படுத்த தான்" ஊர் ஊரா சுற்ற அல்ல..! கிண்டலாக நினைத்தால்.."கொரோனா" உறுதி..!

By ezhil mozhiFirst Published Mar 21, 2020, 11:40 AM IST
Highlights

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

லீவு விட்டதே "தனிமைப்படுத்த தான்" ஊர் ஊரா சுற்ற அல்ல..! கிண்டலாக நினைத்தால்.."கொரோனா" உறுதி..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் "break the chain" என்பதனை கடைப்பிடித்து மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு விமான சேவை முதல் ரயில் பயணம், பேருந்து பயணம் ஆட்டோ, மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுகிறது. மார்க்கெட் கூட நாளை ஒருநாள் மூடப்படுகிறது.

இதற்கு முன்னதாக பள்ளி கல்லூரிகள் மற்றும் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை  செய்யவும் அனுமதி கொடுத்து உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து உள்ளது. இந்த ஒரு நிலையில் தற்போது கோடைகாலம் என்பதால் பொதுவாகவே மக்களின் மன நிலைமை எங்காவது ஊர் சுற்ற வேண்டும், நண்பர்களோடு சேர்ந்து சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டுமென நினைப்பது வழக்கம்.

ஆனால் கொரோனா பாதிப்பு குறித்து சாதாரணமாக எடுத்துக் கொண்டு பலரும், எவ்வளவு கட்டுப்பாடு விதித்தால் ஊர் சுற்றுவதை பார்க்க முடிகிறது. மேலும் இரண்டு மூன்று நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஊர் சூத்ரா திட்டமிடுகின்றனர்.

இவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறித்து இன்னமும் விழிப்புணர்வு ஏற்படவில்லையா அல்லது லீவு விட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் தான் இப்படி சுற்றுகிறார்களா என்பது குறித்த விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றது. இவர்கள் மூலமாக மேலும் பலருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

நாளை ஒருநாள் "மக்கள் ஊரடங்கு உத்தரவு" மூலம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நம்மை நாமே தனிமைப்படுத்தி கொண்டால், இதற்கு முன்னதாக எங்கெல்லாம் கொரோனா வைரஸ் படிந்து இருக்கிறதோ காற்றில் கலந்து இருக்கிறதோ... அவை அனைத்தும் அந்த 14 மணிநேரத்தில் அழிந்துவிடும். அதற்கு நாம் செய்ய வேண்டியது... "அமைதியாக வீட்டில் இருக்க வேண்டும்" என்பதே.

அதாவது எந்த ஒரு கிருமிநாசினியை பயன்படுத்தியும் வெளியில் கொரோனா வைரசை அளிப்பதை விட நாம் எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க... கடந்த ஒரு வார காலமாகவே வீட்டிலிருந்து வேலை செய்பவர்களும், விளையாட்டுத்தனமாக பள்ளி கல்லூரி மாணவர்களும் வெளியில் செல்வதை பார்க்க முடிகிறது. இன்னும் ஒரு சிலர் கொரோனா வைரஸ் எல்லாம் தன்னை ஒன்றும் தாக்காது. அடிக்கிற வெயிலுக்கு அந்த வைரஸ் செத்துப் போய்விடும் என்றெல்லாம் இலவச ஆலோசனை கூறிக் கொண்டு, மற்றவர்களுக்கும் தவறான ஆலோசனை வழங்கி வருவதை பார்க்கும் போது மனம் வேதனை அடைய செய்கிறது.

ஒரு நாடே "மக்கள் ஊரடங்கு" உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கும் போது ஒரு சிலர் செய்யக்கூடிய இது போன்ற விஷயங்களால் தான் பாதிப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

எனவே  நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், தற்போது லீவு விட்டிருப்பது ஊர் சுற்றுவதாக அல்ல... தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதே.. என்பதனை புரிந்து கொள்ளுதல் வேண்டும். இல்லை என்றால், கொரோனாவில் இருந்து தப்பிப்பது சிரமமே...! 

click me!