
செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே பறித்துச் செல்லப்படும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. நடந்து சென்று கொண்டே செல்போனில் பேசுபவரிடம் இருந்தும், தனியாக செல்லும் பெண்களிடம் இருந்தும் செல்போன்கள் பறித்து செல்லப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் இது போன்று சில நிகழ்வுகள் நடைபெற்றாலும், சென்னை மற்றும் சுற்று புற பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.
திருவொற்றியூரை சேர்ந்த பழனி என்பவரின் மகள் சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மீனாவின் தாய், அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
சாலையின் நடைபாதையில் நின்று கொண்டு மீனா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த செல்போன் விலை உயர்ந்தது என்று கூறப்படுகிறது. அப்போது மீனாவின் அருகில் வந்த வாலிபர் ஒருவர், செல்போனை பறித்துக் கொண்டு ஓட முயன்றார்.
மீனா துணிச்சலுடன், அந்த நபரை கீழே தள்ளிவிட்டு விட்டு அவனிடமிருந்த செல்போனை மீட்டுள்ளர். அதற்குள் அங்கிருந்த பொதுமக்கள் வந்து திருடனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் திருடனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து செல்போன்களை திருடுவது தெரியவந்தது.
சென்னை, சைதாப்பேட்டை அருகே செல்போனில் பேசிக் கொண்டே நடந்து சென்றவரிடம் பைக்கில் வந்த இரண்டு நபர்கள், திடீரென செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் சென்னையில் தற்போது அதிகளவில் நடந்து வருகிறது.
செல்போனில் பேசிக் கொண்டே செல்பவர்களிடம் தான் செல்போன் திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். செல்போன் பறிகொடுத்தவர்களின் புகார்கள் போலீஸ் நிலையத்தில் ஏராளமாக வந்தவண்ணம் உள்ளன. செல்போன் திருடர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று செல்போன் பறிகொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.