
இந்த மாதத்தில் 9 கிரகங்களின் ராசி மாற்றம் நிகழ உள்ள நிலையில், புதன் கிரகம் தனது ராசியை மீன ராசியில் இருந்து, மேஷ ராசிக்குள் மாற்றியுள்ளார். இந்த புதன் கிரகம் ஏப்ரல் 24, ஞாயிறு வரை மேஷ ராசியில் தங்குவார். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் பாதிப்பைஏற்படுத்தும். பேச்சு மற்றும் வியாபாரத்தின் காரணியாக புதனின் ராசி மாற்றம், சிலருக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
ராசி மாறிய புதன் கிரகம்:
சிலருக்கு நீண்ட நாட்களாக தடைபட்டு இருந்த பணிகள் நிறைவடையும். புதனின் ராசி மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை தரும் யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
புதன் மேஷ ராசியில்பிரவேசிப்பதால், இந்த ராசிக்காரர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும், ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருங்கள். மேலும், இந்த நேரத்தில் கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
ரிஷபம்:
புதனின் ராசி மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் வரும். வெளிநாட்டு பயணங்களின் ஆசை நிறைவேறும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது நல்ல நேரம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் வெற்றியை தரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு இருக்கும். புதுமணத் தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான நல்ல தகவல்களைப் பெறலாம்.வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதனின் ராசி மாற்றம், வெற்றி வாய்ப்பை தேடி தரும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். சவால்களை சமாளிக்க முடியும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். கோர்ட்டில் வழக்கு இருந்தால் வெற்றி கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் வாழ்வில் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் அதிக தடைகள் வரலாம். உடல்நலப் பிரச்சனைஏற்படும். பணம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். எதையும் துணிச்சலுடன் செயல்படுத்துங்கள்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். திருமண யோகம் கிடைக்கும். கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்களும் வெற்றி பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி நிச்சயம். பணியில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.