Horoscope: கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி பலன்களை கொண்டவர்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது, ஏராளமாக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஒரே வீட்டில் வளரும் உடன் பிறப்புகள் மற்ற எல்லா உறவுகளையும் விட எப்போதும் ஒரு நல்ல உணர்ச்சி பிணைப்புடன் காணப்படுகின்றனர். ஆனால், இவர்களின் உணர்ச்சி பிணைப்பானது ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் வேறுபட்டிருக்கும். சில சமயங்களில் ராசி பலன்களை வைத்தும் அவர்களின் குணாதிசயங்கள் கணிக்கப்படுகின்றது.
இரண்டு வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவர் ஒரே பாதையில் பயணிப்பது என்பது மிகுந்த சிரமமான ஒன்றாகும். குறிப்பாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசி பலன்களை கொண்டவர்கள் ஒரே வீட்டில் இருக்கும் போது, ஏராளமாக பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மேஷம் மற்றும் கும்பம்:
மேஷ ராசிக்காரர்கள் அதிக தைரிய சாலிகளாக இருப்பார்கள். வீட்டில் தன்னிசையான சில முடிவுகளை எடுக்கும் தகுதி உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், கும்ப ராசிக்காரர்கள் பிடிவாதம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொதுவாக, இவர்கள் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்ற பிடிவாதம் கொண்டவர்கள். எனவே, இந்த இரண்டு ராசி உடையவர்களும் ஒரே வீட்டில் இருந்தால்,அடிக்கடி சண்டை வரும்.
கடகம் மற்றும் ரிஷபம்:
கடக ராசிக்காரர்கள், எப்பொழுதும் அமைதியை விரும்புபவர்கள். மற்றவர்களிடம், அதிக மகிழ்ச்சியாகவும், அன்பாகவும் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும், பிறருடன் சண்டையில் ஈடுபடுவதை தவிர்ப்பார்கள்.
உணர்ச்சி வசம் அதிகம் இருப்பதால், இவர்களை மற்றவர்களை எளிதில் காயப்படுத்த முடியும். இவர்களுடன், ரிஷபம் ராசி கொண்ட உடன் பிறப்புகள் இருந்தால் அவர்களின் உணர்ச்சிகளை எளிதில் காயப்படுத்தி விடுவார்கள். ஆகையால், இருவரும்இருவரும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
சிம்மம் மற்றும் விருச்சிகம்:
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும், மற்றவர்களை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால், விருச்சிக ராசி உடையவர்கள் மற்றவர்களின் தலையீடு இன்றி சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற சிந்தனை உடையவர்கள். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும்.
மீனம் மற்றும் கன்னி:
இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர், எதிர் எதிர் திசையில் பயணிப்பவர்கள். மீனம் ராசிக்காரர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நடைமுறை வாழ்க்கையோடு ஒப்பிடும் தன்மை உடையோர். கன்னி ராசிக்காரர்கள் மிகுந்த மென்மையான, வாழ்க்கையில் செல்லக் கூடியவர்கள். இளகிய மணம் கொண்ட இவர்களால் சிறு சொல்லைக் கூட தாங்கிக் கொள்ள முடியாது. எனவே, இவர்கள் இருவருக்கும் செட் ஆகாது.
கும்பம் மற்றும் மகரம்:
கும்ப ராசி உடையவர்கள் எப்பொழும் தங்கள் நலனில் மட்டும் சுயநலமாக இருப்பார்கள். பிறரிடம் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், மகர ராசிக்காரர்களோ பிறரிடம் ஆதிக்கம் செலுத்தும் தன்மை உடையவர்கள். எனவே, பெரும்பாலான நேரங்களில், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு வந்து போகும்.