இந்த பதிவில் சத்தான ராகி புட்டு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் தங்கள் உணவில் தானியங்களை அதிகமாக சேர்த்ததால் தான். அதுவும் குறிப்பாக கேழ்வரகு (அ) ராகியை கூழ் செய்து காலை காலை உணவாக சாப்பிட்டுவார்கள். ஆனால், இந்த காலத்து குழந்தைகள் இந்த கேழ்வரகு கூழ் சாப்பிட விரும்புவதில்லை. ஆகையால், நீங்கள் கேழ்வரகில் புட்டு செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அரிசி புட்டு ராகி புட்டு கோதுமை புட்டு திண்ணை புட்டு என புட்டு வகைகள் ஏராளம் உள்ளது. அந்த வகையில் இன்று உங்கள் வீட்டில், காலை உணவாக உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ராகி புட்டு செய்து கொடுங்கள். முக்கியமாக இந்த கூட்டு செய்வது மிகவும் எளிது. இந்த கேழ்வரகு புட்டு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, சத்தானதும் கூட. சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் சத்தான ராகி புட்டு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: 2 கப் கோதுமை இருக்கா? குட்டீஸ்க்கு பிடித்தமான பாஸ்தா செஞ்சு கொடுங்க .. தட்டு காலியாகும்!
ராகி புட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 3 கப்
உப்பு - 1/2 ஸ்பூன்
தேங்காய் - அரை மூடி (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
சர்க்கரை
அவித்த பாசி பயறு
வாழைப்பழம்
இதையும் படிங்க: குழந்தைகளுக்குப் பிடித்த பூரி! ரவையில் ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க!
செய்முறை:
ராகி புட்டு செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டு புட்டுப்படத்திற்கு ஏற்றவாறு மாவை கலந்து கொள்ளுங்கள். முக்கியமாக, தண்ணீர் அதிகமாக ஊற்றிவிடக் கூடாது, அதுபோல மிகுந்த வறட்சியாகவும் இருக்கக் கூடாது.
இதனை அடுத்து புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்க விடுங்கள். பின்னர் புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில் முதலில் சிறிதளவு புட்டு மாவு சேர்த்து போடுங்கள். அதன் பிறகு துருவிய தேங்காயையும் போடுங்கள். மறுபடியும் புட்டு மாவை போட்டு குழாய் நிரம்பும் வரை தொடர்ந்து இப்படியே செய்யுங்கள். பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து ஐந்து நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவுதான் ராகி புட்டு ரெடி!!
பிறகு அதை ஒரு தட்டில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் சர்க்கரை, அவித்த பாசி பயறு, வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்..
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D