பூண்டு, வெங்காயம் சாப்பிட்டால், பாலியல் ஆசையை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். அது எந்தளவுக்கு சரி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே, வெங்காயம் (ம) பூண்டு எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படும். மேலும், இவை உணவின் சுவையை அதிகரிக்கும். இவை சமையலுக்கு மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இவை இரண்டும் பாலியல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. இவை பாலியல் செயல்திறனை மேம்படுத்தும். பூண்டில் அல்லிசின் நிறைந்துள்ளது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான விந்தணு எண்ணிக்கையை அதிகரித்து, ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்க செய்ய இது செயல்படுகிறது.
வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பாலியல் பலன்கள்:
ஆற்றல் அதிகரிப்பு: உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, உடல் ஆற்றலை இழக்கிறது. இதன் காரணமாக, பாலியல் செயல்திறன் குறைகிறது. எனவே, ஆற்றலை அதிகரிக்க வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடுங்கள். ஏனெனில், இவை இரண்டிலும் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதனால், உடலுறவின் போது எளிதில் சோர்வடைய மாட்டீர்கள்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்: வெங்காயம் மற்றும் பூண்டில் சல்பைட் உள்ளது. இவை கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த அளவை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக, பிறப்புறுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டம் எளிதாக கிடைக்கும்.
இதையும் படிங்க: கணவன்மார்களே! இந்த 6 வினாடி கிஸ் ஃபார்முலா ரகசியம் பற்றி அவசியம் தெரிஞ்சிகோங்க!
விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: வெங்காயம் மற்றும் பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும். பெண்கள் எளிதாக கர்ப்பம் தரிக்க ஆரோக்கியமான விந்தணுக்கள் மிகவும் அவசியம் என்பதால், ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை பெரும் முக்கிய பங்கு வகிக்கிறது.
டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்: டெஸ்டோஸ்டிரோன் பாலியல் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட்டு, டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கலாம். உங்களுக்கு தெரியுமா.. டெஸ்டோஸ்டிரோன் தான் லிபிடோவை தூண்டுகிறது. இதுதான் இனப்பெருக்கத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், தம்பதியினரிடையே உறவின் மகிழ்ச்சியையும் அதிகரிக்க உதவுகிறது.
பாலியல் ஆசையை அதிகரிக்கும்: பூண்டில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் உள்ளதால் இதை சாப்பிடுவதன் மூலம், பெண்களின் பாலியல் ஆசை அதிகரிக்க செய்கிறது. மேலும்,
வெங்காயம் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி மற்றும் பாலியல் ஆசையை அதிகரிக்க செய்கிறது. எனவே, பூண்டு மற்றும் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பாலியல் ஆசைய அதிகரிக்கும்.
இதையும் படிங்க: உங்கள் கணவர் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறாரா.. இல்லையா..? இந்த அறிகுறிகள் சொல்லும்..
பாலியல் வாழ்க்கைக்கு பூண்டு - வெங்காயம் எப்படி சாப்பிடுவது?: இதை பற்றி அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், கிட்டத்தட்ட எல்லோரும் பூண்டு வெங்காயத்தை உணவில் சேர்ப்பார்கள். ஆனால், பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க பூண்டு மற்றும் வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தவும்.
இதற்கு, நீங்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தை பச்சையாக சாலட்டில் சேர்த்து சாப்பிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு இப்படி சாப்பிட பிடிக்கவில்லை என்றால், சூப்பில் சேர்க்கலாம். அதுமட்டுமின்றி, பூண்டு டீ (அ) வெங்காயத் தண்ணீரையும் குடிக்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D