கணவன்மார்களே! இந்த 6 வினாடி கிஸ் ஃபார்முலா ரகசியம் பற்றி அவசியம் தெரிஞ்சிகோங்க!
உங்கள் திருமண உறவில் இடைவெளி இருப்பதாக உணர்கிறீர்களா? என்ன செய்வது என்று தெரியவில்லையா.. அப்படியானால், உங்களுக்கான முத்த சூத்திரம் இங்கு உள்ளது.

ஒவ்வொரு ஆணிண் வாழ்க்கையிலும் மனைவி என்பவள் ரொம்ப முக்கியமானவள். சில சமயங்களில் கணவன்மார்கள் நடந்து செல்லும் போது மனைவியின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். இன்னும் சிலரோ வீட்டை விட்டு வெளியேறும்போது மனைவியை கட்டிப்பிடிப்பார்கள்.
ஆனால் உங்கள் மனைவியை 6 வினாடிகள் முத்தமிட்டால், அது உங்கள் உறவை இன்னும் வலுப்படுத்தும் தெரியுமா..? ஆம்..ஆராய்ச்சி கூட இருக்கிறது. இப்போது இதுகுறித்து முழுமையாக அறிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்..
6 வினாடி முத்தம் மட்டும் ஏன்?: பொதுவாக பெண்கள் தங்கள் உறவைப் பற்றி அதிகம் சிந்திப்பது மட்டுமல்லாமல் அது குறித்து வருத்தமும் அடைகிறார்கள். இப்படி உங்கள் மனைவி யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது 6 வினாடிகள் தொடர்ந்து அவளை முத்தமிடுங்கள். இது ஏன் என்று கேட்டிருக்கிறீர்களா..?
முத்தம் ஏன் அவசியம்?: இதுகுறித்து நடத்திய ஆராய்ச்சியின் படி, வேலைக்குச் செல்லும் முன் மனைவியை முத்தமிடும் ஆண்கள், முத்தமிடுமிடமால் செல்லும் ஆண்களை விட 4 ஆண்டுகள் வாழ்கிறார்களாம். அதுவும் குறிப்பாக, இந்த 6 வினாடி முத்தம் கணவன்-மனைவி வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை கொண்டு வருகிறதாம்.
6 செகண்ட் கிஸ்: இந்த 6 செகண்ட் கிஸ் லிப் டு லிப் முத்தம். ஆராய்ச்சியின் படி, இந்த 6 வினாடி முத்தம் சாதாரண முத்தத்தை விட பல மடங்கு சக்தி வாய்ந்ததாம். முத்தமிடும் நேரம் குறைவாக இருக்கலாம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அது அதிக லாபம் தரும் தெரியுமா..
நான்கு நொடிகள் முத்தமிடுவது சரியா? என்று நீங்கள் யோசிக்கலாம்.. ஆனால், இந்த 6 வினாடிகள் முத்தமிடும்போது, ஆக்ஸிடாஸின் வெளியிடப்படுகிறது, இது உங்கள் மனைவியின் மனதில் உணர்ச்சி பாதுகாப்பு (ம) இணைப்பை உருவாக்குகிறது. இது உங்கள் உறவை
பலப்படுத்துகிறது.
இதையும் படிங்க: நீங்கள் புதிதாக காதலிக்கும் நபரா..? இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்லையெனில் உறவு முறிந்துவிடும்!
கட்டிப்பிடிப்பது: ஒரு முத்தத்திற்கு 6 வினாடிகள் சரியானதாகக் கருதப்படுவது போல, வெறும் 20 வினாடிகள் கட்டிப்பிடித்தால், ஆக்ஸிடாஸின் உங்கள் துணைக்கு வெளியாகும், இதுவும் 6 வினாடி முத்தம் போலவே நன்மை தான். எனவே, நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம், உங்கள் மனைவிக்கு 6 வினாடி முத்தம் மற்றும் 20 வினாடிகள் கட்டிப்பிடிக்க மறக்காதீர்கள்.
இதையும் படிங்க:கணவன்மார்களே! மனைவியுடன் ரொமாண்டிக்காக இருக்க சூப்பரான டிப்ஸ்.. கண்டிப்பா ட்ரை பண்ணுங்க வொர்க் அவுட் ஆகும்!
ஆக்ஸிடாஸின் என்றால் என்ன?: ஆக்ஸிடாஸின் என்பது 'காதல் ஹார்மோன்' என்று அழைக்கப்படும், இது ஒரு ஹார்மோன் ஆகும். நீங்கள் யாரையாவது கட்டிப்பிடிக்கும்போது அல்லது உச்சக்கட்டத்தை அனுபவிக்கும்போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கும். முக்கியமாக, இது உங்கள் திருமண வாழ்க்கையை ரொம்பவே அழகாக மாற்றும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D