குடைமிளகாயில் ஒருடைம் இப்படி சாதம் செய்யுங்க.. செம ருசியாக இருக்கும்!

By Kalai Selvi  |  First Published Jun 7, 2024, 3:13 PM IST

இந்த பதிவில் குடைமிளகாய் சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.


பொதுவாகவே, வெரைட்டி ரைஸ் என்று அதை நாம் நினைவுக்கு வருவது எலுமிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம், தக்காளி சாதம் போன்றவை ஆகும். அந்த லிஸ்டில் குடைமிளகாய் சாதமும் அடங்கும். 

என்ன குடைமிளகாய் சாதமா என்று நீங்கள் நினைக்கிறீர்களா..? ஆம் இந்த சாதம் செய்வதற்கு ரொம்பவே ஈசி. மற்றும் இந்த குடைமிளகாய் சாதம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். குறிப்பாக, உங்க வீட்டு குழந்தைகள் இந்த குடைமிளகாய் சாதத்தை ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு முறை செய்து கொடுத்தால் அடிக்கடி கேட்பார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். ப்ரைட் ரைஸ் தோத்து போகும் அளவிற்கு குடைமிளகாய் சாதத்தின் சுவை அட்டகாசமாக இருக்கும். சரி வாங்க இப்போது இந்த பதிவில் குடைமிளகாய் சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  மீல் மேக்கரில் ஒரு முறை இப்படி கிரேவி செய்ங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்!

குடைமிளகாய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்: 
பாஸ்மதி அரிசி 
காய்ந்த மிளகாய் - 4
பூண்டு - 10
பெரிய வெங்காயம் - ( நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
கடுகு - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  குக்கரில் குழையாமல் டேஸ்ட்டான காளான் பிரியாணி... 10 நிமிடத்தில் செய்திடலாம்..!

செய்முறை:
குடைமிளகாய் சாதம் செய்ய முதலில் எடுத்து வைத்த பாசுமதியை, குழையாமல், உதிரியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரிசி எந்த அளவிற்கு உதிரியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு சுவையைக் கொடுக்கும்.

இதனை அடுத்து ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு நன்கு பொரிந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலையை போடுங்கள். பிறகு நீளவாக்கில் மெல்லியதாக வெட்டி வைத்த வெங்காயத்தை இதனுடன் சேர்ந்து லேசாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் அதிக பொன்னிறமாக வதக்க வேண்டிய தேவையில்லை. அதன்பிறகு இதனுடன் வெட்டி வைத்த தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி பாதி அளவிற்கு வதங்கிதும் வெட்டி வைத்துள்ள குடமிளகாயையும் இதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

இதற்கிடையில் எடுத்து வைத்த பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொரகொர பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்டை குடைமிளகாய் நன்கு வெந்ததும் அதனுடன் சேர்த்து ஒரு முறை கிளறி விடுங்கள். பிறகு உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடுங்கள்.

காய்கறிகள் நன்கு வெந்தது மசாலாவின் பச்சை வாசனை போனதும் வடித்து வைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அரிசி உடையாதபடி கிளறவும். இறுதியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி தலையை இதனுடன் சேர்த்து சூடாக பரிமாறுங்கள். அவ்வளவுதான் டேஸ்ட்டான சுவையில் குடைமிளகாய் சாதம் ரெடி!! இந்த குடைமிளகாய் சாதத்திற்கு சைடு டிஷ் ஆக உருளைக்கிழங்கு வறுவல் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!