முன்னாள் காதலியோடு காதலன் செய்த காரியம் !! காதலனை கதற வைத்த போலீஸ்!!

Published : Feb 25, 2020, 11:36 PM ISTUpdated : Feb 26, 2020, 07:34 AM IST
முன்னாள் காதலியோடு காதலன்  செய்த காரியம் !! காதலனை கதற வைத்த போலீஸ்!!

சுருக்கம்

காதலிக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அவருடன் இருப்பது போன்று படத்தை உருவாக்கினார். அதைவைத்து ஹோலி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

 T.Balamurukan

காதலிக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து பழிவாங்கும் நோக்கத்துடன் அவருடன் இருப்பது போன்று படத்தை உருவாக்கினார். அதைவைத்து ஹோலி வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் அருகில் உள்ள சலோன் பகுதியைக் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.  இந்நிலையில் அந்தப்  பெண்ணுக்கு வழக்கறிஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.இந்த தகவலைத் தெரிந்ததும் கோபம் ஆனார் மனோஜ் குமார். அப்பெண்ணை பழிவாங்கத் திட்டமிட்டார். எனவே அந்தப் பெண்ணும், தானும் ஒன்றாக இருப்பது போன்ற படங்களை மார்பிங் செய்து உருவாக்கினார். அந்தப் படங்களுடன் ஹோலி  வாழ்த்து போஸ்டர்களை தயாரித்து அந்தப் பெண் வசிக்கும் சலோன் பகுதியில் ஓட்டினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் தந்தை உடனடியாக காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளின் கீழ் மனோஜ் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும், பிரதாப்கர் என்னும் பகுதிக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் மறைந்திருந்த அவரை 'ஆன்ட்டி ரோமியோ' பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.   

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!