40,000 கோடிக்கு மேல் சொத்துக்களை கொண்ட பெரும்பணக்கார தொழிலதிபரின் வாரிசு ஒருவர் அனைத்து செல்வங்களையும் விட்டு துறவியாக மாறிவிட்டார்.. யார் அவர்? என்று இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரஜினியின் முத்து படத்தில் வரும் பிளாஷ்பேக்கில் வரும் ரஜினி, தனது கோடிக்கணக்கான சொத்துக்களை வேண்டாம் என்று கூறி துறவறம் சென்று விடுவார். கிட்டத்தட்ட அதே போல் ஒரு சம்பவம் நிஜத்திலும் நடந்துள்ளது. ஆம்.. 40,000 கோடிக்கு மேல் சொத்துக்களை கொண்ட பெரும்பணக்கார தொழிலதிபரின் வாரிசு ஒருவர் அனைத்து செல்வங்களையும் விட்டு துறவியாக மாறிவிட்டார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மை தான்.
AK என்று பிரபலமான தொழிலதிபராக அறியப்படும் ஆனந்த கிருஷ்ணன், ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட், செயற்கைக்கோள்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் பல்வேறு தொழில்களை அவர் நடத்தி வருகிறார். மேலும் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். இந்த நிறுவனம் ஒரு காலத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் தலைமையில் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நிதியுதவி அளித்தது.
முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி.. ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆக மாறிய அதானி..
ஆனந்த கிருஷ்ணன் புத்த மதத்தை சேர்ந்தவர் மேலும் அவர் எண்ணற்ற தொண்டு முயற்சிகளில் பங்கேற்றுள்ளார். கல்வி முதல் மனிதாபிமான முயற்சிகள் வரை பல காரணங்களுக்காக நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு குறைந்தது 9 நிறுவனங்களில் பங்குகள் உள்ளன. அவர் சம்பாதித்த பெரும் செல்வம் அவரை மலேசியாவின் பணக்காரர்களில் ஒருவராக ஆக்கியுள்ளது.
ஆனால் அவரின் மகன் அஜன் சிறிபான்யோ, தனது 18வது வயதில் புத்த துறவியாக மாற முடிவு செய்தார். அவர் ஏன் புத்த மத துறவியாக மாறினார் என்பதற்கான காரணங்கள் வெளியாவில்லை என்றாலும் முதலில் "வேடிக்கைக்காக" துறவு வாழ்க்கை முறையைப் பின்பற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் குறுகிய கால முயற்சியாக ஆரம்பித்தது படிப்படியாக நீண்ட கால முயற்சியாக அது மாறியதாகவும் கூறப்படுகிறது. "நாம் கொடுப்பதன் மூலம் வாழ்க்கையை உருவாக்குகிறோம்." என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு அவர் துறவறம் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனது தந்தையின் பல கோடி மதிப்புள்ள வணிக் சாம்ராஜ்யத்தை நடத்துவதற்குப் பதிலாக, சிறிபான்யோ துறவறம் பூண்டு, எளிமையாக வாழ முடிவு செய்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறிபான்யோ துறவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் தற்போது தாய்லாந்தை தளமாகக் கொண்ட தாவோ டம் மடாலயத்தின் மடாதிபதியாக இருந்து வருகிறார்.. அவர் தனது இரண்டு சகோதரிகளுடன் இங்கிலாந்தில் வளர்ந்ததாக கூறப்படுகிறது. சிரிபான்யோ 8 மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் என்றும் கூறப்படுகிறது.. அவர் பன்முகக் கலாச்சாரக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளார்.
குடும்ப அன்பு பௌத்த மதத்தின் கொள்கைகளில் ஒன்றாக இருப்பதால், அவரது முந்தைய வாழ்க்கை முறைக்கு சுருக்கமாகத் திரும்ப வேண்டும் என்பதால் அவர் அவ்வப்போது தனது தந்தையை சந்தித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
சிறிபான்யோ தனக்குச் சொந்தமான அனைத்து செல்வங்களையும் துறந்து துறவியாக காட்டில் வாழத் தேர்ந்தெடுத்து 2 தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. 40,000 கோடி சொத்துக்களை துறந்து துறவறம் பூண்ட சிறிபான்யோவின் தந்தை ஆனந்த் கிருஷ்ண மூர்த்தில் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.