Pongal 2024 : பொங்கல் பண்டிகையில் பார்க்க வேண்டிய கோயில்கள்.. இதோ முழுவிவரம்!

By vinoth kumarFirst Published Jan 7, 2024, 1:37 PM IST
Highlights

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாள். இந்த தை திருநாளில் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதுடன், வேளாண் தொழிலுக்கு வந்தனை செய்து கொண்டாடி மகிழ்வர். 

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் செல்லக்கூடிய கோயில்களின் விவரங்கள் இடம் பெற்றுள்ளன. 

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் பொங்கல் திருநாள். இந்த தை திருநாளில் விதைத்த நெற்பயிரை அறுவடை செய்து பயன்பெறுவதுடன், வேளாண் தொழிலுக்கு வந்தனை செய்து கொண்டாடி மகிழ்வர். இந்த தை திருநாள் நான்கு நாட்கள் கொண்டாடப்படும். முதல், நாள் போகி பண்டிகை, இரண்டாம் நாள் தை பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் ஆகும்.

இதையும் படிங்க;- Pongal 2024 : இந்த பொங்கலுக்கு வாசலை அழகாக்கும் சூப்பரான கோலங்கள் டிசைன்கள்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க...

போகி, பழமையான பொருட்களை தீயிட்டு அழித்து, ‘பழைய கழிதலும், புதியன புகுதலும்’என்ற அடிப்படையில், புதுமையை வரவேற்கும் விதமாக போகிப் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இரண்டாம், நாளான பொங்கல் திருநாளில் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானிடம் வழிபட்டு உண்பது வழக்கம். மூன்றாம் நாளில்  மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவித்து, பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். இந்நாளில், மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம். சலங்கை கட்டி மாடுகளுக்கு அலங்காரம் செய்து, மாடுகளை பொங்கல் உண்ண வைத்து வழிபடுவது வழக்கம். 

காணும் பொங்கலுக்கு கன்னிப் பொங்கல், கணுப் பண்டிகை என்கிற பெயர்களும் உண்டு.  இந்த திருநாளானது, தமிழகத்தில் சாதி, மதம், பேதம் இன்றி அனைவராலும் கொண்டப்படும்  சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த திருநாளில் உறவினர்களுடன் ஒன்று கூடி கொண்டாடி மகிழ்வர். காணும் பொங்கல் நாளில் கிராமங்களில் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, போன்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் களைகட்டும். ஜல்லிக்கட்டு விளையாட்டு உலகம் முழுவது புகழ் வாய்ந்த ஒன்றாகும். அதேபோல் 
கோயிலுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

பார்க்க வேண்டிய கோயில்கள்! 

காணும் பொங்கலில் சுசீந்தரம் தானுமலையான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யலாம். இது நாகர்கோவிலில் இருந்து குமரி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூன்று தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள். மூவருக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. காஞ்சியில் உள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் பகவத் பாதான் ஆலயத்தை காணும் பொங்கலில் சென்று தரிசனம் செய்யலாம். 

இதையும் படிங்க;-  Pongal 2024: இந்த ஆண்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் எப்போது..? முழுதகவல்கள் இதோ!

அதேபோல், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கூடல் அழகர் கோவில் என பாரம்பரியமான பல கோயில்கள் அமைந்துள்ளன. கோயம்புத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை, மருதமலை உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. தஞ்சாவூரில் ங்கைகொண்ட சோழபுரம் கோயில் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயில்களும் உள்ளன. 

மேலும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்குவது  திருவண்ணாமலை அண்ணாமலையார் இக்கோவிலில் பொங்கல் தினத்தன்று பல்லாயிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

click me!