பொங்கல் திருவிழாவின் முதல் நாள் 'போகி' கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

By manimegalai aFirst Published Dec 23, 2019, 5:41 PM IST
Highlights

தமிழர்களின் பாரம்பரிய விழா என்றால் அது பொங்கல் திருவிழா தான். வண்ண வண்ண கோலம் மிட்டு, கோலத்தில் நடுவே மகாலட்சுமியாக கிராம புறங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் மாட்டின் சாணத்தை நடுவே வைத்து, அதில் ஒரு பூ... என காலை நேரமே மிகவும் புத்துணர்ச்சியோடு தொடங்கும்.

சரி பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

பழையன கழிந்து புதியன புகுதல் தான் இந்த நாளின் சிறப்பு...

நம்மிடம் இருந்த கெட்ட எண்ணங்கள், கோவம், பிடிவாதம், போன்ற கெட்ட குணாதிசயங்களை விட்டுவிட்டு, நல்லவை மட்டுமே இனி செய்வோம் என மனதார நாம் ஏற்று கொள்ளவேண்டிய ஒரு நாள்.

நம்மிடம்  உள்ள எதிர்மறை எண்ணங்களை கலைக்கும் விதமாக நம் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் அதாவது, பாய், தலையணை, துடைப்பம், கிழைந்த ஆடைகளை வைத்து கொள்ள கூடாது என்பதற்காக தீயிட்டு கொளுத்துவோம்.

பின் குளித்து விட்டு நம்முடைய அன்றாட வேலைகள் துவங்கும்.

ஆனால்... நவீன காலம் வளர்ச்சி அடைய அடைய... போகி பண்டிகை அன்று, டயர், பிளாஸ்டிக் பொருட்கள், மற்றும் காற்றை மாசு படுத்தும் பல பொருட்கள் எரிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் துரித முயற்சியால் கடந்த ஓரிரு வருடங்களாக போகி பண்டிகை அன்று காற்று மாசு படுத்தல் சற்று குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இந்திரனுக்கும் போகி என்று ஒரு பெயர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!