மாணவர்கள் படு குஷி ...! ஜன.3 தான் பள்ளிகள் திறக்கப்படும்..! அரசு அதிரடி..!

By ezhil mozhiFirst Published Dec 23, 2019, 5:30 PM IST
Highlights

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக மூன்றாம் தேதி திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால், நாளை முதல் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படு குஷி ...! ஜன.3 தான் பள்ளிகள் திறக்கப்படும்..! அரசு அதிரடி..!

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதி ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 2ஆம் தேதிக்கு பதிலாக மூன்றாம் தேதி திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அரையாண்டு தேர்வு இன்றுடன் முடிந்துள்ளதால், நாளை முதல் ஜனவரி மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பி உள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்தபடி கல்லூரிகளுக்கு ஜனவரி 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு,ஜன.2 திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு வர உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

click me!