ரூ.2000 எதிரொலி..! ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் பண முதலைகள்..!

By ezhil mozhiFirst Published Dec 23, 2019, 4:30 PM IST
Highlights

பழைய ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய்க்கு மாற்றாக 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. அதன் பின்னர் புதிய ரூபாய் 500, 200, 100, 50 ரூபாய் 10 என புதிய ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி.

ரூ.2000 எதிரொலி..! ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் முதலைகள்..! 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் பழைய ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாய்க்கு மாற்றாக 2000 ரூபாயை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. அதன் பின்னர் புதிய ரூபாய் 500, 200, 100, 50 ரூபாய் 10 என புதிய ரூபாய் தாள்களை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி.

இதற்கிடையில் 2020 வரும் ஜனவரி மாதத்திற்குள் தற்போது பயன்பாட்டில் உள்ள புதிய 2000 ரூபாய் தாளும் தடை செய்யப்படலாம் அல்லது மெல்லமெல்ல குறைக்கப்படலாம் என்ற விஷயம் பரவலாக பேசப்பட்டு வருவதால் 2000 ரூபாய் தாள்களை கட்டுக்கட்டாக வைத்திருப்பவர்கள் எப்படி ஒயிட் மணி ஆக மாற்றுவது என முயற்சி மேற்கொண்டு வருகிறார்களாம்.

அதன்படி பல்வேறு துறைகளில் முதலீடு செய்யவும் திட்டமிட்டு அதற்காக இடம் வாங்குவதும், பள்ளி கல்லூரி கட்டுவதற்கு இடம் வாங்குவதும், மருத்துவமனை கட்டுவதற்கும்,  பெரிய மண்டபம் கட்டுவதற்கும் பல ஏக்கர் கணக்கில் நிலம் தேடி வருவதாகவும், இதனால் தற்சமயம் ரியல் எஸ்டேட் துறை சற்று சூடு பிடித்துள்ளது என இத்துறையில் உள்ள வல்லுனர்கள் பேசிக் கொள்வதாக தகவல் கிடைத்து உள்ளது. அதற்கேற்றவாறு தற்போதைய நிலையில் முன்பு புழக்கத்தில் இருந்த அளவுக்கு இல்லாமல் தற்போது 2000 ரூபாய் குறைவாகத்தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!