Worst Foods to Eat While Drinking Alcohol : நீங்கள் மது அருந்தும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
மது அருந்துவது தீங்கு என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் மக்கள் மது அருந்துகிறார்கள். மேலும், மது இல்லாமல் எந்தவித கொண்டாட்டமும் முழுமையடையாது. ஆனால், சிலர் ஆல்கஹால் உடன் பலவிதமான உணவுப் பொருட்களை சாப்பிடுவது விரும்புகிறார்கள். இருப்பினும் இங்கே ஒரு விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, நீங்கள் மது அருந்து போது சில உணவுப் பொருட்கள் சாப்பிடுவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, எந்தெந்த பொருட்களை ஆல்கஹால் உடன் சாப்பிடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் பெண்கள்! மதுபோதை பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?
undefined
ஆல்கஹால் உடன் சாப்பிட கூடாத உணவுகள் இவைகள் :
1. உலர் பழங்கள் : உலர் பழங்களில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் இதை ஆல்கஹால் உடன் சேர்த்து சாப்பிட்டால், அல்கஹால் உறிஞ்சுவது மெதுவாகிறது.
2. முட்டைகள் : முட்டையில் நிறைய புரதம் உள்ளது. இது ஆல்கஹால் உறிஞ்சப்படுவது மெதுவாக்குகிறது மற்றும் நீண்ட காலத்திற்கு உங்களை முழுதாக வைத்திருக்கும்.
3.பழங்கள் : பழங்களில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால் அவற்றை மது உடன் சேர்த்து சாப்பிட்டால் குடல் அலர்ஜியை ஏற்படுத்தும்.
4. பால் பொருட்கள் : மது அருந்தும் போது பால் பொருட்கள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில், செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
5. உப்பு உணவுகள் : பிரெஞ்சு பொரியல் போன்ற உப்பு நிறைந்த உணவுகளை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது செரிமான தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: 30 நாட்கள் மது அருந்தாமல் இருந்தால் என்ன நடக்கும்?
6. சோடா அல்லது குளிர்பானங்கள் : சிலருக்கு சோடா அல்லது குளிர்பானத்துடன் மது அருந்து பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மதுவுடன் சோடா அல்லது குளிர்பானம் கலந்து குடித்தால் உடலின் நீரின் அளவு குறையும்.
7. எண்ணெய் பொருட்கள் : மது அருந்தும் போது அல்லது மது அருந்திய பின்னரோ எப்போதும் எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில், வயிற்றில் வாயு, எரிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
8. இனிப்புகள்: மது அருந்தும் போது ஒரு போதும் இனிப்புகளை சாப்பிடக்கூடாது. மதுவுடன் இனிப்புகளை சேர்த்து சாப்பிட்டால், போதை இரட்டிப்பாகிவிடும். இதனால் அந்த நபர் தனது உணர்வுகளை இழக்கிறார்.
9. பீட்சா : மதுவுடன் பீட்சா சாப்பிடுவதை பலர் விரும்புகிறார்கள். ஆனால், இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. மீறினால், கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்தும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D