Sleeping in Jeans : ஜீன்ஸ் மாதிரியான இறுக்கமான உடையை இரவில் அணிந்து கொண்டு தூங்குவது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை கொண்டு வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களும், பெண்களும் ஜீன்ஸ் அணிவதை மிகவும் வசதியாக உணருகின்றனர். ஜீன்ஸ் நாகரீக உலகில் தவிர்க்க முடியாத உடையாகிவிட்டது. இதனை பகலில் அணிந்து கொள்வது வரை பிரச்சனை இல்லை. ஆனால் படுக்கைக்கு செல்லும்போது நிச்சயமாக ஜீன்ஸை தவிர்க்க வேண்டும். இரவில் கட்டாயமாக ஜீன்ஸ் அணியக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
பூஞ்சை தொற்று பாதிப்பு
ஜீன்ஸ் உரத்த துணியான டெனிம் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பொதுவாக இந்த மாதிரியான ஆடைகள், பருத்தி உடைகளை போல வியர்வையை உறிந்து கொள்வதில்லை. ஆகவே அதிகப்படியான வியர்வை தொடை இடுக்குகளில், அந்தரங்க பகுதியில், கால்களில் என வழிந்து பிசுபிசுக்கத் தொடங்கிவிடும். இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் இரவில் இந்த வியர்வை, காற்றுபுகாத சூழல் என பூஞ்சை தொற்று வர வாய்ப்புள்ளது. இதனால் ஒருவரின் இனப்பெருக்க திறனில் கூட தாக்கம் ஏற்படலாம். ஏனெனில் அதிகப்படியான வெப்பம் விந்துக்களின் தரத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: Jeans-ஐ அயர்ன் செய்லாமா.. வேண்டாமா..? பலர் செய்யும் தவறு 'இதுதான்'
தோல் நோய்
ஜீன்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால் உடலுக்கு காற்று அதிகம் கிடைக்காது. ஏற்கனவே படிந்த வியர்வையால் தோலில் அரிப்பு ஏற்படலாம். இதனை சொறிவதால் ஒவ்வாமை அல்லது புண்கள் ஏற்படலாம். இது மாதிரி இறுக்கமான ஆடையை நீண்ட நேரம் அணியாமல் இருப்பதே தோலுக்கு நாம் செய்யும் நன்மையாக இருக்கும். அதிகமான வியர்வை வெளியேறும் தோல் அமைப்பு உடையவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: உடம்பை ஃபிட் ஆக காட்டும் ஜீன்ஸ்; கரெக்டான ஜீன்ஸ் செலக்ட் செய்ய டிப்ஸ்!!
உடல் சூடு:
நாம் தூங்கும் போது தான் உடல் சற்று தளர்வாக இருக்கும். இந்த நேரத்தில் ஜீன்ஸ் அசௌகரியத்தை ஏற்படுத்தும். தூங்கிய கொஞ்ச நேரத்தில் வெப்பம் குறைந்து உடல் ஓய்வு நிலைக்கு செல்ல வேண்டும். ஆனால் ஜீன்ஸ் அணிவதால் காற்று சரியாக கிடைக்காமல் உடல் சூடு அதிகமாகி உறக்கம் கெடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடல் வலி:
நாம் உறங்கும்போது தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். அப்படி அணிவதால் உடலில் அழுத்தம் ஏற்படாது. ஆனால் ஜீன்ஸ் அணிந்தால் வயிறு, கருப்பை, பிறப்புறுப்பில் கூடுதல் அழுத்தம் உண்டாகும். ரத்த ஓட்டம் கூட இயல்பாக இல்லாமல் தடைபடும் சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வலி கூடுமாம்.
செரிமான சிக்கல்:
சொன்னால் நம்ப முடிகிறதா? இறுக்கமான ஜீன்ஸ் உடுத்தி உறங்கினால் வயிற்று வலி, செரிமான கோளாறுகள், வாயுத் தொல்லை கூட சிலருக்கு வருகிறதாம். அதனால் இரவில் பருத்தி ஆடைகள் அல்லது தளர்வான மற்ற ஆடைகளை அணியுங்கள். இறுக்கமான ஜீன்ஸ் வேண்டாம். நல்ல தூக்கம் வரும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D