தொப்பையை கரைக்க இனி கஷ்டப்படாதீங்க.. தினமும் காலை இந்த அஞ்சுல ஒன்னு குடிங்க..!

By Kalai SelviFirst Published Jul 19, 2024, 8:00 AM IST
Highlights

Belly Fat Drinks : தொப்பையை குறைக்க உடற்பயிற்சியுடன் சில பிரத்தியேக பானங்களையும் குடித்தால் தொப்பையை எளிதில் குறைத்து விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

இன்றைய காலத்தில் எடை அதிகரிப்பால் பாலரும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைப்பது மிகவும் சிரமமானது. எடையை அதிகரிப்பதன் மிகப்பெரிய விளைவு வயிறு, முதுகு மற்றும் தொடைகளில் காணப்படும் கொழுப்பு தான். இப்படி அதிகரித்துக் காணப்படும் இந்த கொழுப்பானது, முழு உடலையும் வடிவமற்றதாக மாற்றுகிறது. 

அதுவும் குறிப்பாக, மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால், வயிற்றில் இருக்கும் தொப்பையானது நாம் உடுத்தி இருக்கும் ஆடைக்கு வெளியே நீண்டு காணப்படும். தொப்பையைக் குறைக்க பலர் ஜிம்மில் மணிகண்டக்கில் உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் விரும்பிய உடலமைப்பை பெற முடிவதில்லை.

Latest Videos

ஆனால், தொப்பையை குறைக்க உடற்பயிற்சியுடன் சில பிரத்தியேக பானங்களையும் குடித்தால் தொப்பையை எளிதில் குறைத்து விடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் மந்திர பானம் என்று எதுவும் இல்லை என்றாலும் நம் வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை சீரான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் சேர்த்துக் கொண்டால் போதும். அவை வயிற்று தொப்பையை எளிதாக குறைக்கும் மற்றும் உடல் எடையையும் குறைக்க பெரிதும் உதவுகிறது.

இந்த ஆரோக்கிய பானமானது, நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக, பிடிவாதமான தொப்பையைக் கூட இலகுவாக குறைத்துவிடும். எனவே, வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க, எந்தெந்த பானங்களை குடிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  காலையில் சீக்கிரம் எழுவதற்கு இனி அலாரம் தேவையில்லை.. இந்த 4 விஷயங்களை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்!

வயிற்று தொப்பையை குறைக்க உதவும் 5 ஆரோக்கிய பானங்கள்:

1. இஞ்சி டீ:
இஞ்சி டீ-யில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, இஞ்சி டீ குடிப்பது வயிற்று வீக்கத்தை குறைக்கிறது மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இஞ்சி டீ செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்று தொப்பையை குறைக்கவும் உதவுகிறது.

2. கற்றாழை ஜூஸ்:
கற்றாழை ஜூஸ் தொப்பையை குறைப்பதில் மந்திர வேலையை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கற்றாழை ஜூஸ் குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தி, உடலை ஆரோக்கியமாகவும் வைக்கும்.

இதையும் படிங்க:  உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்கணுமா..? அப்ப தினமும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ங்க..

3. வெள்ளரி மற்றும் புதினா ஜூஸ்:
வெள்ளரி மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இது நீரேற்றமாக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும். இந்த ஜூஸில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இதில் கலோரிகள் மிகவும் குறைவு, நார்ச்சத்து அதிகம். எனவே, இதை குடிப்பதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருப்பதோடு, பசியும் கட்டுப்படும்.

4. சீரக தண்ணீர்:
சீரகத் தண்ணீர் ஒரு சிறந்த பானமாகும். இதில் கலோரிகள் குறைவு. இந்த பானம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இது பசியை அடக்குவதிலு,ம் உடல் எடையை குறைக்கும் செயல் முறையை விரிவு படுத்துவதிலும் அற்புதமாக செயல்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

5. எலுமிபச்சை நீர்:
காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அந்த நீரை குடித்தால், அது உங்கள் உடலுக்கு பல அற்புதங்களை செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இந்த நீரில் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மற்றும் ஃபைபர் நிறைந்துள்ளது. இது தொப்பை கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது.

click me!