உணர்ச்சி உறவு உடலுறவை விட ஆபத்தாம்.. ஏன் அப்படி தெரியுமா?

Published : Jul 18, 2024, 10:30 PM IST
உணர்ச்சி உறவு உடலுறவை விட ஆபத்தாம்.. ஏன் அப்படி தெரியுமா?

சுருக்கம்

Emotional Affair : உங்கள் மனைவி உங்களிடமிருந்து விலகி, வேறொரு நபர் மீது உணர்ச்சி உறவில் ஈடுப்பட்டால், அது உடலுறவை விட ரொம்பவே ஆபத்து தெரியுமா..?

இன்றைய காலகட்டத்தில் உறவுகளை பேணுவது என்பது மிகவும் கடினம் என்றே சொல்லலாம். குறிப்பாக, ஆண் வேலை வேலை என்று வேலையில் அதிக நேரம் செலவிடுவதால், தன் மனைவியுடன் பழகுவதற்கு நேரமில்லை. மேலும், ஒருவரையொருவர்  புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. இதனால் இருவருக்கும் இடையே இடைவெளி வருகிறது. இது இயற்கையானது தான். ஆனால், அதைவிட முக்கியமானது என்னவெனில், மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது உடலுறவுக்காக அல்ல, உணர்ச்சி ரீதியானது தான். ஆனால், இந்த உணர்ச்சி உறவு என்பது உடலுறவை விடவும் ரொம்பவே ஆபத்து என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால், அதுதான் உண்மை. ஆம், நீங்கள் செய்யும் ஒரு தவறு உங்கள் துணையை உங்களிடம் இருந்து விலகிச் செல்ல வைக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் உங்கள் துணையிடம்
உணர்ச்சிபூர்வமாக இணைவது எப்படி? உங்கள் உறவை எப்படி காப்பாற்றுவது என்பதை இப்போது இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உணர்ச்சி பூர்வமான உறவு என்றால் என்ன?
திருமணத்திற்கு முன் நான்காவது பின் ஒரு நபருடன் உணர்வு பூர்வமாக இணைவது இதன் பொருள் உங்கள் துணை உங்களுடன் வாழ்கிறார் என்று அர்த்தம். ஆனால், உணர்ச்சிபூர்வமான ஆதரவுக்காகவும், அவர்களின் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்வதற்காகவும் ஒரு நபரின் உதவியை நாடுகிறார். இது நட்பு இரக்கம் அல்லது அன்பின் வடிவை இருக்கலாம். ஆனால், உடலுறவில் ஈடுபடாது.

இதையும் படிங்க:  ஒருதலை காதலை மறக்க முடியாமல் அவதிப்படுறீங்களா..? உங்களுக்கான சில டிப்ஸ்..

உடலுறவை விட உணர்ச்சி உறவு ஏன் ஆபத்து?
உங்கள் துணை தனிமையை உணர்ந்தால், நீங்கள் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர் வேறு ஒரு நபரிடம் செல்ல வாய்ப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், உங்கள் துணை உங்களை விட்டு விலகி செல்வதற்கான வாய்ப்புகள் கூட அதிகம் உண்டு.

உணர்ச்சி பிணைப்பு ஏன் முக்கியம்?
ஒரு நபர் இருக்கும் ஒரு உறவையும் தாண்டி உணர்ச்சிபூர்வமான இணைப்பை நாடினால், அது துணியை ஏமாற்றுவதற்கு சமம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உணர்ச்சிகரமான விவகாரங்கள், உறவின் முறிவுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், அனைவருக்கும் உடல் தேவைகளை விட, உணர்ச்சி பூர்வமான ஆதரவு தான் மிகவும் முக்கியமானது.

இதையும் படிங்க:  இந்த சின்ன விஷயங்கள் கூட துரோகம் தான் தெரியுமா? அதுவும் கள்ள உறவுக்கு சமம்.. உடனே மாத்திக்கங்க..

இந்த அறிகுறிகள் உங்கள் மனைவியிடம் இருக்கா?
உங்கள் மனைவி உங்களிடம் இருந்து விலகுவதாலோ, உங்களுக்கு இடையான தொடர்பு குறைந்து வருவதாக நீங்கள் உணர்ந்தாலோ, அவர் இப்போது வேறு ஒரு நபருடன் தனது நேரத்தை செலவிடுகிறார் என்று அர்த்தம். குறிப்பாக, உங்கள் மனைவி தொலைபேசியில் அல்லது சமூக வலை தளத்திலோ மூன்றாவது ஒரு நபருடன் நீண்ட நேரம் ரகசியமாக பேசியிருந்து, அதை உங்களிடமிருந்து மறைத்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதுபோல உங்கள் மனைவி உங்கள் உணர்வுகள் மற்றும் தேவைகளை புறக்கணிக்க தொடங்கினாலோ, பொய் சொல்ல தொடங்கினாலோ நீங்கள் நம்புங்கள் இது உணர்ச்சிகரமான விவகாரத்தின் அறிகுறியாகும்.

இதை தடுப்பது எப்படி?
உங்கள் மனைவி உணர்வு பூர்வமான உறவில் ஒருவரிடம் ஈடுபட்டால் அதை பிரிப்பது மிகவும் கடினம். ஆனால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே போதுமான புரிதலும், அன்பும் இருந்தால் உங்கள் துணை உணர்ச்சிவசப்படுவதை தடுக்கலாம். முக்கியமாக, தினமும் உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள் மற்றும் பிரச்சனைகள் வெளிப்படையாக பேசுங்கள். இதை விட வேறு சிறந்த வழி எதுவுமில்லை. அவ்வளவுதான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்