திருச்சி: 26 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை...! எப்போது திருந்தும் இந்த சமுகம்..?

By ezhil mozhiFirst Published Oct 25, 2019, 7:09 PM IST
Highlights

தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி: 26 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை...! எப்போது திருந்தும் இந்த சமுகம்..? 

திருச்சி அருகே மணப்பாறையில் 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து விவரம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிரமாக முயற்சி செய்து, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தை விளையாடி கொண்டிருந்த போது 26 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ள இந்த கிணற்றில் குழந்தை தவறி விழுந்து உள்ளது.

இந்த கிணறு ஏற்கனவே மூடப்பட்டது  என்றும், தற்போது மண் சரிவின் காரணமாக குழந்தை உள்ளே விழுந்துள்ளது என தெரியவந்தாலும் கூட... இந்த கிணற்றை சரிவர மூடாமல்  இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் குழந்தை வளர்க்கும் பெற்றோர்கள் இது கூடவா தெரிந்து வைத்திருக்க மாட்டார்கள் ..? கிணறு இருக்கும் இடம் தெரிந்தும்... குழந்தை விளையாடும் இடம் என்றும் தெரிந்தும் கூட இவ்வளவு அலட்சியமாக இருக்க இடிகிறது என்றால்... இது யாருடைய  தவறு என சொல்வது....
எதற்கெடுத்தாலும் அரசை  மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இருந்தால், கடைசியில் இது போன்ற நினைத்துகூட பார்க்க முடியாத சம்பவங்களால் இழப்பும்.. வலியும் வேதனையும் யாருக்கு.. ? 

சமீபத்தில் பேனர் விழுந்து சுப ஸ்ரீ  உயிரிழந்த பின், பேனர் வைக்கும் நடைமுறை சற்று குறைந்து உள்ளது.. ஆனால் எத்தனையோ குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழும் செய்தியை கேட்டு வருகிறோம்... ஆனாலும் மீண்டும் மீண்டும் இந்த சம்பவங்கள் நடைபெறுகிறது என்றால் எப்போது தான் மாறும் இந்த சமூதாயம் என்ற கேள்வி தான் எழுகிறது.

click me!