எனக்கு பிடிச்ச மாதிரி நான் நடிக்குறேன்... உனக்கு என்ன...? அதிரடி பதில் கொடுத்த தாப்ஸி...!

Published : Oct 25, 2019, 06:23 PM ISTUpdated : Oct 25, 2019, 06:28 PM IST
எனக்கு பிடிச்ச மாதிரி நான் நடிக்குறேன்... உனக்கு என்ன...? அதிரடி பதில் கொடுத்த தாப்ஸி...!

சுருக்கம்

படத்தில ரோல் என்னமோ நல்லது தான்னாலும், வயதான கதாபாத்திரங்களில் வயதான நடிகைகளை நடிக்க வச்சா பொருத்தமா இருக்கும்னு, சில வயதான பாலிவுட் நடிகைகள் அறிவுரை சொல்லியிருக்காங்க. 

இப்படி எல்லாம் நடிச்சா எப்படி?? தாப்ஸிக்கு அறிவுரை கூறிய மூத்த நடிகைகள்.... எனக்கு பிடிச்ச மாதிரி நான் நடிக்குறேன்... உனக்கு என்ன... அதிரடி பதிலடி கொடுத்த தாப்ஸி....

தீபாவளியை முன்னிட்டு இந்தியாவில் ஏராளமான படங்கள் வரிசை கட்டி வெளியாவது வழக்கம். அதில் அதிக பட்ஜெட் படங்களான இந்தி திரையுலகம் அனைவரது கவனத்தையும் ஈர்க்க கூடியது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகினி புகழ் மெளனி ராய் நடித்துள்ள 'மேட் இன் சீனா', போலவே பர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் வெளியாக உள்ள 'ஹவுஸ்புல் 4' ஆகிய இரண்டு படங்களும் காமெடி ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளன. 

இதே வரிசையில் துஸ்கர் ஹிராந்தனி இயக்கத்தில் தாப்ஸி பன்னு நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் 'ஹி ஆங்க்', ஆனால் இது காமெடி படம் இல்ல. இந்திய துப்பாகிச் சுடும் வீராங்கனைகளான சந்த்ரோ தோமர், பிகாஷி தோமர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு தான் படமா உருவாகியிருக்கு. இதில் வயதான வீராங்கனைகளா தாப்ஸி பன்னுவும், பூமி பட்நேகரும் நடிச்சியிருக்காங்க. படத்தில ரோல் என்னமோ நல்லது தான்னாலும், வயதான கதாபாத்திரங்களில் வயதான நடிகைகளை நடிக்க வச்சா பொருத்தமா இருக்கும்னு, சில வயதான பாலிவுட் நடிகைகள் அறிவுரை சொல்லியிருக்காங்க. 

இந்த அட்வைஸால கடுப்பான தாப்ஸி, "இளம் வயதில் வயதான கதாபாத்திரத்தில் நடிப்பதில் என்ன தவறு இருக்குன்னும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்த கிடைத்த கதாபாத்திரங்களில் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது, அது பிடிக்கிறதால தான் நாங்க நடிக்கிறோம், முதலில் குறை சொல்வதை நிறுத்துங்கன்னு" பதிலடி கொடுத்திருக்காங்க.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்
பெண்ணிடம் நட்பு வைக்க சாணக்கியர் சொல்லும் இந்த விஷயத்தை கடைபிடிங்க