சொல்லி அடிக்கும் மோடி..! இந்திய மக்களுக்கு குஷியோ குஷி..! மாதம் ரூ. 5000 பெரும் பட்டய கிளப்பும் சூப்பர் திட்டம்..!

By ezhil mozhiFirst Published Jan 29, 2019, 7:45 PM IST
Highlights

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அனால் நிறைய பேருக்கு, அந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை என்றே கூறலாம்.

சொல்லி அடிக்கும் மோடி..! இந்திய மக்களுக்கு குஷியோ குஷி..! பட்டய கிளப்பும் மாதம் ரூ.5000 பெரும் சூப்பர் திட்டம்..!

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆனால் நிறைய பேருக்கு, அந்த திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை என்றே கூறலாம்.

அந்த வகையில் இந்திய மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமான அடல் பென்ஷன் யோஜனா திட்டம் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் அடல் பென்ஷன் யோஜனா. இது ஒரு அடிப்படையான ஓய்வூதிய திட்டம். இந்த திட்டடத்தில் சிறிய தொகையில் முதலீடு செய்து வந்தால், 60 வயதிலிருந்து மாதம் ரூபாய் 5000 வரை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் துறையினரும், அமைப்புசாரா பிரிவை சார்ந்தவர்களும் அவங்களோட ஓய்வூதிய காலத்தில் ஒவ்வொரு மாசமும் 1000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரைக்கும் பெற முடியும் என்ற அற்புத விஷயம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? 

இந்த திட்டடத்தில் சேர என்ன செய்ய வேண்டும் தெரியுமா ..?

அதாவது, மத்திய அரசு சார்பாக 1000 ரூபாயை போனஸாக நம்ம கணக்கில் செலுத்தப்படும். இதை பெற முதலில் நமக்கு ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.

18 வயது நிரம்பியவர்கள் முதல் 65 வயது நிரம்பியவர்கள் வரை இந்த திட்டத்தில் சேரலாம்.

உதாரணம் :

18 வயது நிரம்பியவர் மாதம் ரூபாய் 42 செலுத்தி வந்தால், இவர்கள் 60 வயதை தொடும் போது மாதம் ரூ.1000 ஓய்வூதிய தொகையாக பெற முடியும்.

இதே போன்று, 210 ரூபாய் மாதம் தோறும் முதலீடு செய்து வந்தால், 60 வயது முதல் 5000 ரூபாயை ஓய்வூதிய தொகையாக பெறலாம். இந்த திட்டடத்தில் இணைய நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், அருகில் உள்ள எஸ்பிஐ கிளையை அணுகியோ அல்லது ஐசிஐசிஐ வங்கியை அணுகியோ அல்லது அஞ்சலகத்தை அணுகியோ இந்த திட்டடத்தில் இன்றே சேரலாம். 

முன்பு இந்த திட்டுதல் சேர அதிகபட்ச வயசாக 60  இருந்தது. ஆனால், கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு பிறகு 65 வயதாக நீட்டித்து திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு. இதில் இன்னொரு சூப்பர் மேட்டர் என்னவென்றால், இந்த திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு விபத்து காப்பீடாக ஒரு லட்சம் வரை இருந்தது. அதை தற்போது இரண்டு லட்சமாக உயர்த்தி மக்களுக்கு மிகவும் ஏதுவான ஒரு விஷயத்தை செய்து உள்ளது மத்திய அரசு. 

மேலும் இது பற்றிமுழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், www.npscra.nsdl.co.in என்ற இணையத்தள பக்கம் சென்று தெரிந்துகொள்ளலாம். 
 

click me!