அத்தனை வித பழங்கள் இருந்தும் கடவுளுக்கு ஏன் வாழைப்பழம் வைத்து படைக்கின்றனர் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Jan 29, 2019, 6:02 PM IST
Highlights

எத்தனையோ பழங்கள் இருந்தும், வீட்டில் சாமி கும்பிடும் பொது முதலில் நாம் வங்குவது வாழை பழம் தான். அப்படி என்ன இதில் சுவாரஸ்யம் இருக்கிறது என யோசனையா..? வாங்க பார்க்கலாம்.

அத்தனை வித பழங்கள் இருந்தும் கடவுளுக்கு ஏன் வாழைப்பழம் வைத்து படைக்கின்றனர் தெரியுமா..? 

எத்தனையோ பழங்கள் இருந்தும், வீட்டில் சாமி கும்பிடும் போது முதலில் நாம் வங்குவது வாழைபழம் தான். அப்படி என்ன இதில் சுவாரஸ்யம் இருக்கிறது என யோசனையா..? வாங்க பார்க்கலாம்.

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா? எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள் மற்ற எந்தப்பழமாக இருந்தாலும், சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் வாழைப்பழத்தை உரித்து முழுமையாக வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.

எனது இறைவா மீண்டும் பிறவாத நிலையைக்கொடு என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். இதை தான் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்துள்ளனர். இன்றளவும் நாம் அதை தான் கடைபிடித்து வருகிறோம். 

அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய். வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாத ஒன்று. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு கொட்டையை போட்டால் அந்த விதையிலிருந்து உருவாகிறதே ஆனால், தேங்காயை சாப்பிட்டு விட்டு ஓட்டை போட்டால் அது முளைக்காது.

முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னை மரம் முளைக்கும். அதுபோல வாழை மரத்தில் இருந்துதான் வாழைக்கன்று வரும்.பழம் கொட்டை என்பதே கிடையாது. இதனால் தான் கடவுளை வணங்கும் போது, வாழைப்பழம் வைத்து படைக்கிறோம். 

click me!