அஞ்சலகத்தில் இப்படி ஒரு திட்டமா..? இது தெரிஞ்சா பேங்குக்கு போகவே மாட்டீங்க..!

Published : Jan 29, 2019, 03:30 PM IST
அஞ்சலகத்தில் இப்படி ஒரு திட்டமா..? இது தெரிஞ்சா பேங்குக்கு போகவே மாட்டீங்க..!

சுருக்கம்

அஞ்சலகத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை பற்றி நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை .

அஞ்சலகத்தில் உள்ள பல்வேறு திட்டங்களை பற்றி நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. வங்கியில் கணக்கு தொடங்கு வதற்கு முன்னால் மட்டுமே தபால் நிலையங்களை அணுகி அதில் உள்ள பல திட்டங்கள் முதல் சேமிப்பு கணக்குகளை பராமரித்து வந்தனர்.

ஆனால் இந்த நிலை தற்போது இல்லை என்றே கூறலாம். காரணம் அனைவருமே வங்கி கணக்கு வைத்திருப்பத்தே.. அதே சமயத்தில் வங்கியை விட, தபால் நிலையத்தில் நல்ல பல திட்டங்கள் உள்ளது.  

அதில் ஒன்று...

சுகன்யா சம்ரிதி அக்கவுண்ட் ( sukanya  samriddhi  account )

நம்ம ஊரில் இந்த திட்டத்தை "செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்று பெயர். இந்த திட்டத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு 8.1  சதவீத வட்டி வழங்கப்படும்

1000 ரூபாய் முதல் ரூ. 1,50,000 ஆயிரம் வரை எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம்.

10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் மட்டும் தான் இந்த கணக்கு வைக்க முடியும்.

அப்பெண் 21 வயதை அடையும் வரை மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட  தொகையை இந்த கணக்கில் செலுத்த வேண்டும்

திருமண செலவுக்காக பெரிய தொகை தேவைப்படுவதாலும்,மேற்படிப்பு போன்றவற்றிக்கு இந்த பணம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்

இந்த திட்டம் மூலம் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க செய்யலாம்.மேலும், சிறுக சிறுக பணத்தை சேர்த்து வைத்தால்,ஒரு நாள் அது மலை போல் பெரிதாக தெரியும். சரியான சமயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டம் பெண் குழந்தை பெற்ற பெற்றோர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்