எதை மறந்தாலும் மருத்துவரிடம் இதை சொல்ல மறக்காதீங்க....!

Published : Jan 29, 2019, 06:31 PM IST
எதை மறந்தாலும் மருத்துவரிடம் இதை சொல்ல மறக்காதீங்க....!

சுருக்கம்

நாம் எதை மறந்தாலும் சில விஷயங்களை சிலரிடம் சொல்ல மறக்க கூடாது. அந்த சிலர்.. வேறு யாருமில்லை..நாம் யாரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்கிறோமோ அந்த மருத்துவர்கள் தான்..  

எதை மறந்தாலும் மருத்துவரிடம் இதை சொல்ல மறக்காதீங்க....!

நாம் எதை மறந்தாலும் சில விஷயங்களை சிலரிடம் சொல்ல மறக்க  கூடாது. அந்த சிலர்.. வேறு யாருமில்லை.. நாம் யாரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்கிறோமோ அந்த மருத்துவர்கள் தான்..

அதாவது, கை, கால் நன்றாக இருக்குற வரைக்கும் ஓடி ஆடி உழைப்போம். அதுவே, நம் உடல் நலம் பிரச்னை என்றால் அவ்வாறு செய்ய முடியுமா என்ன..? இது போன்ற சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவரை அணுகும் போது, நாம் சில விஷயங்களை மறைக்கவே கூடாது. அது என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

பாதிக்கப்பட்ட நபர் மருத்துவரிடம் சில உண்மைகளை சொல்ல தயங்கி அப்படியே மறைத்து விடுவார்கள். அவ்வாறு மறைக்கும் போது நமக்கு தேவையான சிகிச்சை பெற முடியாமல் போகும் அப்படி எந்தெந்த விஷயங்களை கண்டிப்பாக மருத்துவரிடம் சொல்லியே ஆக வேண்டும் என்பதை பார்க்கலாம்.

மன அழுத்தம்

ஒரு சிலர் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுவார்கள். ஆனால் வெளியில் சிரித்தவாறு இருப்பார்கள். மேலும் மருத்துவரிடம் சென்றாலும் கூட அங்கேயும் வாய்திறந்து தான் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியபடுத்த மாட்டார்கள். இது முற்றிலும் தவறு இதை கருத்தில் கொண்டு, மருத்துவரிடம் சகஜமாக பேசி உங்களுடைய பிரச்சினையை எடுத்துக் கூறவேண்டும்.

ஒவ்வொரு ஆண்களுக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும். அப்படி பார்க்கும் போது,பொதுவாகவே ஆண்கள் குடிப்பழக்கம் கொண்டிருப்பவர். இதனை மருத்துவரிடம் செல்லும்போது, நான் எப்போதாவது தான் குடிப்பேன் என்று பொய் சொல்வார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் அடிக்கடி குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள், இதனை மருத்துவரிடம் தெரியப்படுத்தவில்லை என்றால் நம் உடல் உறுப்புகளின் பாதிப்பு குறித்து உண்மை நிலவரத்தை அறிந்து கொள்வது கடினமாக மாறிவிடும்

உறக்கம்

ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது நல்ல உறக்கம் கொள்ள வேண்டும். இவ்வாறு உறக்கம் கொள்ளாமல் 4 மணி நேரமோ அல்லது மூன்று மணி நேரம் மட்டும் உறங்கி விட்டு மீதமுள்ள நேரத்தில் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகி உறக்கம் முற்றிலும் கெட்டுவிடும். இது போன்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மருத்துவரிடம் உண்மையைக் கூறவேண்டும்

தாம்பத்ய வாழ்க்கை 

தாம்பத்திய வாழ்க்கையில் திடீரென உங்களுக்கு நாட்டம் இல்லாமல் போவது அல்லது உடலளவில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்படுவது இதை கூர்ந்து கவனித்து மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்

திடீரென ஏற்படும் வலி  

உடலில் ஏற்படும் வலி அல்லது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.. இதுபோன்ற விஷயங்களை கண்டிப்பாக மருத்துவரின் தெரியப்படுத்தவேண்டும். இதேபோன்று புதியதாக உடற்பயிற்சியை செய்து கொண்டிருக்கும் நபர்கள் ஏதாவது வித்தியாசத்தை உணர்ந்தால் உணர்ந்தால், மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாலோ அதன் மூலம் சில பக்க விளைவுகள் ஏற்பட்டு இருக்கலாம். எனவே இதனையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு மருத்துவர் உங்களுக்கு உண்டான பிரச்சினையை மிக எளிதாக அடையாளம் கண்டு அதற்கான உரிய சிகிச்சை அளிப்பார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!