சிலருக்கு வாழ்க்கையில் பிரச்சினை வரலாம் ஆனால் வாழ்க்கையே பிரச்சனை என்றால் ரொம்ப கஷ்டம். இது ஏன் வருகிறது? இதற்கு தீர்வு உண்டா? என்பதை பார்க்கலாம் வாங்க...
எல்லாருடைய வாழ்க்கையில் சந்தோஷம், நிம்மதி, சமாதானம் இருக்கிறதா? என்று கேட்டால் கேள்வி குறிதான். எவ்வளவு சம்பாதித்தாலும் கடன், கணவன் மனைவிக்குள் சண்டை, வாட்டி வதைக்கும் கடன், இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். அதற்கான தீர்வு இதோ..
வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால், கோவிலில் பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். மேலும் கெட்ட சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
மன வருத்தம், மன குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை அடிக்கடி வந்து கொண்டிருந்தால் இரவு படுக்கும் போது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். இவ்வாறு செய்தால் மன அழுத்தம் நீங்கும்.
உடல் வலி, கண் திருஷ்டி மற்றும் சோர்வு ஏற்பட்டால் குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு கலந்து குளிக்க வேண்டும். இதன் மூலம் சோர்வும், மன அழுத்தமும் குறையும்.
காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருந்தால் உங்களது வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டினால் பயம் குறையும்.
சிலருக்கு ஏன்தான் வீட்டிற்கு வருகிறோமோ என்ற எண்ணம் வரும். காரணம் அந்த அளவிற்கு வீட்டில் பிரச்சினை இருக்கும். கணவன் மனைவி இடையே ஓயாத சண்டை வரும். எனவே சமையலறையும், படுக்கையறையும் அருகருகே இருந்தால் தம்பதியர் ஒற்றுமையாக இருப்பர். கணவன், மனைவி இருவரும் ஒரே மெத்தையை தான் பயன்படுத்த வேண்டும். மேலும் கணவனின் இடது பக்கத்தில் மனைவி படுத்து உறங்க வேண்டும்.
காலை எழுந்ததும் உள்ளங்கையை பார்க்கவும் அல்லது ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்க்கவும். இவ்வாறு செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். எவ்வளவு தான் சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால், தினமும் காலையில் வாயில்லா உயிரினங்களுக்கு உணவளிக்க வேண்டும்.
வாகனங்களில் பயணணிக்கும் போதும் சிறிது வேப்பிலை மற்றும் மஞ்சள் எடுத்து செல்லவும். பாசிட்டீவ் எனர்ஜி அதில் இருப்பதால் எந்த விபத்து ஏதும் இன்றி பயணம் இனிமையாக இருக்கும். மேலும்
வீட்டை சுற்றி அல்லது இயற்கை முறையில் நீரோட்டங்கள் இருந்தால் பண புழக்கம் உடனடியாக உயரும். பணம், நகை புழங்கும் பீரோவை, கிழக்கு நோக்கியோ வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். மேலும், பீரோவில் மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைத்தால், எந்த தோஷமும் வராது. பணம் பீரோவில் தங்கும்.