கர்நாடகத்தில் ரூ. 88 கோடி செலவில் செயற்கை மழை...! அப்போ தமிழ்நாட்டுக்கு கோவிந்தா தானா..?

By ezhil mozhiFirst Published May 16, 2019, 1:21 PM IST
Highlights

ரூபாய் 88 கோடி செலவில் கர்நாடக மாநிலத்தில் செயற்கை மழை பெய்விக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
 

ரூ.88 கோடி செலவில் செயற்கை மழை..!  

ரூபாய் 88 கோடி செலவில் கர்நாடக மாநிலத்தில் செயற்கை மழை பெய்விக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு 5 நாட்கள் தாமதமாக, வரும் ஜூன் 6ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பருவ மழையால் மைசூர் குடகு உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சற்று தாமதமாக தொடங்குவதால் எதிர்பார்த்த அளவுக்கு மழை வருமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனை சரி செய்யும் பொருட்டு செயற்கை மழை பெய்விக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ரூபாய் 88 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது அம்மாநில அரசு. இதற்கு முன்னதாக 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து நவீன விமானங்களை கொண்டு வந்து, அதனுடைய இறக்கை மற்றும் ரேடார் கருவிகளை கொண்டு மேகத்தில் செயற்கை மழை காண ரசாயனப் பொடிகள் துருவியது பின்னர் செயற்கை மழையை பெய்ய செய்தனர்.

அதே போன்று இந்த ஆண்டும் செயற்கை மழையை உருவாக்க திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் செயற்கை முறையில் மழை உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தில் செயற்கை மழையை உருவாக்குவது குறித்து முதல்வர் குமாரசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் துணை ஆணையர்கள் தலைமை நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!