
திருமண வரவேற்பில் ஐபிஎல் மேட்ச் லைவ் ஒளிபரப்பு..!
திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் ஐபிஎல் இறுதிப்போட்டி ஒளிபரப்பப்பட்டது. கல்யாணத்தை பார்ப்பதைவிட ஐபிஎல் மேட்ச் பார்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளனர் திருமணத்திற்கு வந்த மக்கள். இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த 13-ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. அப்போது ஐபிஎல் மேட்ச் என்பதால் யாரும் திருமணத்திற்கு வர தயக்கம் காண்பிப்பார்கள் என கருதிய திருமண வீட்டார், திருமண ஹாலிலேயே பெரிய திரையில் ஐபிஎல் மேட்ச் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் திருமணத்திற்கு வருகை புரிந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் அக்கம்பக்கத்தினர் அனைவரும் மணமக்களை பார்த்து வாழ்த்து தெரிவிப்பதை விட மிகவும் ஆர்வமாக ஐபிஎல் மேட்ச் பார்ப்பதில் இருந்துள்ளனர். இது குறித்து அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இந்த வீடியோ எங்கு யாருடைய திருமணத்தில் எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதேவேளையில் இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.