BREAKING குடியரசு தினத்தில் கொந்தளித்த விவசாயிகள்.. செங்கோட்டையில் நுழைந்ததால் செய்வதறியாது திகைத்த போலீசார்.!

By vinoth kumarFirst Published Jan 26, 2021, 3:01 PM IST
Highlights

டிராக்டரில் பேரணி சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த கோபுரத்தின் மீது ஏறி கொடியை நிலைநாட்டினர். 

டிராக்டரில் பேரணி சென்ற விவசாயிகள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த கோபுரத்தின் மீது ஏறி கொடியை நிலைநாட்டினர். 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், அரியானா உள்ளிட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினமான இன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி வருகின்றனர். அப்போது திடீரென டிராக்டருடன் ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்தனர். போலீசார் தடுத்தும் எந்த பலனும் இல்லை. போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடியும் நடத்தினர். கண்ணீர் புகை குண்டும் வீசினர். இதனால், பதற்றம் ஏற்பட்டது. 

இதற்கிடையில் விவசாயிகள் செங்கோட்டையை நுழைந்து முற்றுகையிட்டனர். அத்துடன் செங்கோட்டையில் ஏறி போராட்டம் நடத்தினர். அதிகமானோர் செங்கோட்டையை முற்றுகையிட்டுள்ளதால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 5 மாநில எல்லைகளில் இருந்து செங்கோட்டைக்கு விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். டெல்லி செங்கோட்டையில் சுற்றி 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் வந்துள்ளனர். செங்கோட்டையில் விவசாயிகள் நுழைந்துள்ளதால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்கள் செங்கோட்டையில் தான் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

செங்கோட்டையில் விவசாயிகளின் கொடியேற்றம்

செங்கோட்டையில் இருந்த கோபுரம் மிது சிறிய கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியேற்றினர். வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் கம்பத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டன. 

விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் வேண்டுகோள்

விவசாயிகள் யாரும் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என டெல்லி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!