திரும்ப பெறப்படுகிறதா 100 ரூபாய் நோட்டுகள்? ரிசர்வ் வங்கியே வெளியிட்ட முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jan 25, 2021, 5:24 PM IST
Highlights

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவல் உண்மையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருக்கும் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் திரும்ப பெற திட்டமிட்டுள்ளது என்று ஊடகங்களில் சில தினங்களில் செய்திகள் வெளியாகின. அவை புழக்கத்தில் இருக்காது என்று ரிசர்வ் வங்கியின் துணைப் பொதுச்செயலாளர் மகேஷ் தெரிவித்ததாக இந்தச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பரவும் செய்தி தவறானது என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- விரைவில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது. பழைய ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் திட்டம் ஏதும் இல்லை. அவ்வாறு வெளியாகும் செய்திகள் தவறானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!